News June 17, 2024
செல்போன் எண்கள் 9,8,7,6 என தொடங்குவது ஏன்?

இந்தியாவில் உள்ள 10 இலக்க செல்போன் எண்கள் 9,8,7,6 என்று தொடங்குவதைப் பார்த்திருப்போம். 0,1,2,3,4,5, என ஆரம்பிக்காமல், அவை ஏன் 9,8,7,6 என ஆரம்பிக்கிறது என கேள்வி எழலாம். அதற்கான பதிலைத் தெரிந்து கொள்வோம். 0 என்ற எண் எஸ்டிடி கோடுகளுக்கும், 1 எண் அரசு சேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. 2,3,4,5 எண்கள் தரைவழி தொலைபேசிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் செல்போன் எண் 9,8,7,6 எனத் தொடங்குகின்றன.
Similar News
News March 15, 2026
நாளை மறுநாள் செந்தில் பாலாஜி ஆஜர்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜிதான் காரணம் என தவெக தரப்பில் புகாரளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக விளக்கமளிக்க அவருக்கு CBI சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், டெல்லி CBI அலுவலகத்தில் விசாரணைக்காக மார்ச் 17-ல் நேரில் ஆஜராகப்போவதாக செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் வழக்கில் விசாரணைக்காக டெல்லி CBI அலுவலகத்தில் இன்று விஜய் ஆஜரானார்.
News March 15, 2026
நகைக் கடன் தள்ளுபடி.. முக்கிய தகவல் வெளியானது

தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, திமுகவின் தேர்தல் அறிக்கையை இறுதி செய்வதற்கான பணியும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தொடர்பாக கனிமொழி உள்ளிட்டோர் சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர். அதில், மகளிர் வாக்கை குறிவைத்து 2021 போலவே 2026-லும் நகைக் கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத் தொகை உயர்வு, இளைஞர்களுக்கான சிறப்பு திட்டம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாம்.
News March 15, 2026
எங்கள் வேதனையை புரிந்து கொள்ள வேண்டும்: காங்.,

காங்.,க்கு ஏன் கூடுதல் தொகுதிகள் கொடுத்தீர்கள் என்று கூட்டணி கட்சிகள் கேட்டால் எப்படி என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். தங்கள் வேதனையை தோழமை கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏனென்றால், முதலில் 110 தொகுதிகளில் காங்., நின்றது. பின்னர் அது 63 ஆனது. இதனையடுத்து 25, தற்போது 28 தொகுதிகளை ஏற்றது என்பது தமிழக மண்ணைக் காக்கவே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


