News June 14, 2024

திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தது ஏன்?

image

மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் வென்றது திமுக கூட்டணி. இருப்பினும், திமுகவுக்கு 2019 தேர்தலில் கிடைத்த (33.52%) வாக்குகளுடன் ஒப்பிடுகையில் 2024இல் (26.93%) வாக்குகள் சுமார் 6% குறைந்துள்ளன. அதேநேரத்தில் அதிமுக, பாஜக வாக்குகள் அதிகரித்துள்ளன. இதற்கு, திமுக மீதான அதிருப்தியே காரணம், இதற்கு தீர்வு காணவில்லையெனில் சட்டப்பேரவைத் தேர்தலில் இது எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News March 7, 2026

விஜய் இப்படிப்பட்டவரா.. சங்கீதாவால் பரபரப்பு

image

சங்கீதா விவாகரத்து கோரிய பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அவர் <<19319427>>புதிய மனுவை<<>> தாக்கல் செய்திருப்பதுதான் இன்றைய ஹாட் டாபிக். அதில், மேலும் பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை சங்கீதா முன்வைத்துள்ளார். விஜய்யின் அரசியல் சூழல் கருதி பலமுறை சுமுகமாக விவாகரத்து பெற முயற்சி செய்ததாக குறிப்பிட்டுள்ள அவர், விஜய் பிரிந்து செல்ல மறுத்து வழக்கறிஞர் மூலம் மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

News March 7, 2026

TN-ஐ காப்பாற்ற இறைவனால் தான் முடியும்: நயினார்

image

கஞ்சா போதை பழக்கத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டை காப்பாற்ற இறைவனால்தான் முடியும் என்பதால் திருநள்ளாற்றில் சாமி தரிசனம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இன்று சனிப்பெயர்ச்சி நடப்பது போல், தமிழகத்தில் திமுக ஆட்சியும் அகல வேண்டும் என்றும் இந்து மதத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் எதிரான ஆட்சி இது எனவும் சாடியுள்ளார்.

News March 7, 2026

சங்கீதாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: தமிழிசை

image

சங்கீதா மட்டுமல்ல, அந்த இடத்தில் எந்தப் பெண் இருந்தாலும் அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தமிழிசை கூறியுள்ளார். இது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் தலையிட தான் விரும்பவில்லை என்ற அவர், சங்கீதா கூறுவதை போல விஜய்யால் அவர் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் அது தவறு எனவும் பேசியுள்ளார். மேலும், இதுபோல பெண்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதே தன்னுடைய கவலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!