News March 31, 2025
லீக் செய்தவர் பற்றி ஏன் பேசவில்லை.. நடிகை கேள்வி!

‘சிறகடிக்க ஆசை’ நடிகையின் ‘பிரைவேட்’ வீடியோ எனக் குறிப்பிட்டு வெளியான வீடியோக்களை பற்றி சம்மந்தப்பட்ட நடிகை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திரைக்கு பின் மறைந்து கொண்டு, இதைப் பரப்பியவர் பற்றி ஏன் யாரும் பேசவில்லை. இதைப் பரப்புவதன் மூலம், எல்லா ஆண்களும் Predators என்பதை நிரூபிப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இவரின் பதிவை அடுத்து, அதை லீக் செய்தவர் யாராக இருக்கும் என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.
Similar News
News April 2, 2025
உங்களை வெற்றியாளராக்கும் 7 பழக்கங்கள்

➠ சோம்பேறித்தனம் வேண்டாம் ➠ நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள் ➠ ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை உண்டு , நேரம் உண்டு யாருடனும் உங்களை ஒப்பிட வேண்டாம் ➠ பிறரை பார்த்து பொறாமை கொள்வதை நிறுத்துங்கள் ➠ Over Confidence ரொம்ப டேஞ்சர் bro ➠ எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, தற்போதைய வேலையில் கவனம் செலுத்துங்கள் ➠ மிகவும் முக்கியமானது உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.
News April 2, 2025
ஜிவி டைவர்ஸுக்கு நான் காரணமா? நடிகை விளக்கம்

ஜிவியின் டைவர்ஸுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என திவ்ய பாரதி விளக்கம் அளித்துள்ளார். தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத, தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் தனது பெயர் இழுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நடிகருடன், குறிப்பாக திருமணமான ஆணுடன் நிச்சயமாக டேட்டிங் செய்ய மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார். ‘பேச்சிலர்’ படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்ததால் ஜிவிக்கு டைவர்ஸ் ஆனதாக பலரும் பேசிவருகின்றனர்.
News April 2, 2025
முன்னாள் எம்.பி. முருகேசன் உடல் தகனம்!

உடல்நலக்குறைவால் மறைந்த சிதம்பரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் அ.முருகேசன் (87) உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக சிதம்பரம் மாரியப்பன் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முன்னாள் காங்., தலைவர் K.S.அழகிரி, திருமா, திமுக நிர்வாகிகள், உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.