News August 22, 2024
மகாராஜா படத்தில் நடிக்காதது ஏன்? சாந்தனு விளக்கம்

மகாராஜா படத்தில் நடிக்காமல் போனதற்கு, தந்தை பாக்யராஜ் காரணமல்ல என, நடிகர் சாந்தனு விளக்கமளித்துள்ளார். இயக்குநர் நித்திலன் முதலில் தன்னிடம் கதையை கூறியதாகவும், தயாரிப்பு தரப்பு அதை ஏற்காததால் படம் ட்ராப் ஆனதாகவும் தெரிவித்துள்ளார். ஜூன் 14இல் வெளியான இப்படம் ₹100 கோடியை வசூலித்துள்ளது. மேலும், 2024 இல் நெட்ஃபிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற சாதனையும் படைத்துள்ளது.
Similar News
News August 16, 2025
மகனை திருமணம் செய்த அம்மா.. வெளிநாட்டு விநோதம்!

வாழ்க்கையில் தர்ம சங்கடமான சூழலை சந்தித்தேன் என சிலர் சொல்லுவார்கள். இதை படித்தால் இதைவிட தர்மசங்கடமான சூழல் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும். வெளிநாட்டில் ஏழ்மை காரணமாக தத்து கொடுத்த மகனை அடையாளம் தெரியாமல் பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்ததோடு 2 குழந்தைகளை பெற்றுள்ளார் தற்போது DNA சோதனையில், அந்த இளைஞர் தனது மகன் என்பதை அறிந்த அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். So Sad..!
News August 16, 2025
அஸ்வின் பேச்சுக்கு CSK பதிலடி

2025 IPL சீசனில் டெவால்ட் ப்ரேவிஸை விதிகளின் படி, ₹2.2 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்ததாக CSK விளக்கம் அளித்துள்ளது. கடந்த IPL தொடரின் போது குர்ஜப்னீத் சிங் காயமடைந்தார். அவருக்கு மாற்று வீரராக ப்ரேவிஸை, CSK கூடுதல் தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்ததாக அஸ்வின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு வீரர் காயம்பட்டால், அவருக்கு கொடுக்கப்பட்ட தொகையையே மாற்று வீரருக்கும் கொடுக்க வேண்டும் என்பது IPL விதி.
News August 16, 2025
பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர்? PIB FACTCHECK

அனைத்து பெண்களுக்கும் இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், அதற்கு உடனே விண்ணப்பிக்கலாம் எனவும் ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் உலா வருகிறது. அது உண்மையல்ல என்று மத்திய அரசின் PIBFactCheck மறுத்துள்ளது. ‘இலவச ஸ்கூட்டி திட்டம்’ என்று எந்த திட்டமும் இல்லை. அரசு உறுதிப்படுத்தாத எந்த தகவலையும் நம்பாதீர், யாருக்கும் ஷேர் செய்யவும் வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.