News December 29, 2024
விஜயகாந்த் நினைவு நாளுக்கு விஜய் வராதது ஏன்?

தன்னை வளர்த்துவிட்ட விஜயகாந்தின் நினைவு நாளுக்கு கூட விஜய்யால் வர முடியவில்லையா என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில், காவல்துறை அனுமதி மறுத்ததாலேயே அவர் செல்லவில்லை என தவெகவினர் தற்போது கூறி வருகிறார்கள். எனினும், விஜய் தரப்பிலிருந்து இதுதொடர்பாக விளக்கம் ஏதும் வரவில்லை. அதெல்லாம் சரி, கேப்டன் நினைவுநாளுக்கு ஒரு பதிவை கூட விஜய் போடாதது ஏன் என்பதற்கு என்ன பதில்?
Similar News
News March 26, 2026
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக குறைந்தது

காலையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், மாலையில் தலைகீழாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹320 குறைந்து ₹13,350-க்கும், சவரனுக்கு ₹2,560 குறைந்து ₹1,06,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளதால், வரும் நாள்களிலும் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 26, 2026
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெயுடன் இயங்கி வருகிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை எனவும், தட்டுப்பாடு குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 26, 2026
₹18,000 சம்பளம்… டிகிரி, டிப்ளமோ போதும்

ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலையில் 450 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியர், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு டிப்ளமோ / டிகிரி முடித்திருக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஸ்டைபண்டாக மாதம் ₹18,000 வழங்கப்படும். இதற்கு இந்த <


