News March 22, 2025
சித்தராமையா பங்கேற்காதது ஏன்?

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பங்கேற்கவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் அவருக்கு உடன்பாடு எதுவும் இல்லையா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் பங்கேற்காதது ஏன் என்பதற்கான விடை கிடைத்துள்ளது. இதுகுறித்து டி.கே.சிவக்குமார், காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே சித்தராமையாவால் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என விளக்கமளித்துள்ளார்.
Similar News
News March 23, 2025
அட்லி படத்தில் அல்லு அர்ஜுனுக்கு டபுள் ரோல்?

அட்லி இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் டபுள் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு கேரக்டர் பயங்கர நெகட்டிவாக இருக்கும் எனவும், அதுவே படத்தின் வில்லன் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஷூட்டிங்கை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
News March 23, 2025
CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

CUET – UG நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களிலும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (மார்ச் 22) நிறைவடைந்தது. இந்நிலையில், நாளை (மார்ச் 24) இரவு 11.50 வரை <
News March 23, 2025
நீதிபதி வர்மாவை விசாரிக்க கமிட்டி

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை விசாரிக்க, 3 ஐகோர்ட் நீதிபதிகள் அடங்கிய குழுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்துள்ளார். இந்த விசாரணை காலத்தில் வர்மா, எந்த சட்டப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளிப்படைத்தன்மைகாக, இந்த விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றவும் ஆணையிட்டுள்ளார்.