News May 2, 2024
ரிங்கு சிங், ராகுல் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? விளக்கம்

டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு ரிங்கு சிங், கேஎல் ராகுல் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து ரோஹித் சர்மாவும், அகர்கரும் விளக்கமளித்துள்ளனர். ரிங்கு சிங் தவறு இழைக்கவில்லை என்றும், மேலும் ஒரு பவுலர் தேவை என்பதாலேயே அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். ராகுலை விட பண்ட், சாம்சன் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதால் 2 பேரும் தேர்வு செய்யப்பட்டதாக குறிப்பிட்டனர்.
Similar News
News January 30, 2026
லோன் வாங்கியவர்களுக்கு HAPPY NEWS!

பிப்.6-ல் நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், வீட்டு கடன்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, ஹோம் லோனின் வட்டி 9% ஆக இருந்தால், அது 8.75% ஆகக் குறையலாம் என நிபுணர்கள் சொல்கின்றனர். நீங்கள் வீட்டு கடன் வாங்கியிருக்கீங்களா?
News January 30, 2026
நீங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 6 அரசு Apps

இந்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மக்களின் வசதிக்காக பல சேவைகளை செயலிகள் வாயிலாக வழங்கிவருகிறது. அரசு திட்டங்களின் பலனை பெறுவதற்கும், முக்கியமான பணிகளை எளிதாக்குவதற்கும் இந்த செயலிகள் உதவுகிறது. அந்த வகையில் உங்கள் ஃபோனில் கட்டாயம் இருக்கவேண்டிய 6 செயலிகள் என்னென்ன என்பதை போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் இதை SHARE செய்யுங்கள்.
News January 30, 2026
காமெடி நடிகர் குடும்பத்திற்கு கெளரவம்.. மகள் உருக்கம்

தந்தைக்கும், மகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான கெளரவம் கோடிகளில் சிலருக்கு தான் கிடைக்கும் என்பார்கள். அப்படியானால் அந்த கோடியில் ரோபோ சங்கரும், மகள் இந்திரஜாவும் இருக்கின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர், நடிகைக்கான விருது இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கெளரவத்தை பிரபலங்கள் பலரும் வாழ்த்த, அதனை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து இந்திரஜா நெகிழ்ந்துள்ளார்.


