News March 29, 2025
ஏன் தோனி முன்னரே களமிறங்கவில்லை?

சோஷியல் மீடியாவில் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சென்னை அணியின் கையில் இருந்து நழுவிய போது, அவருக்கு பதிலாக அஸ்வின் களமிறங்கினார். ஷிவம் துபே அவுட்டானதுமே அவர் ஏன் வரவில்லை என பலர் வினவுகின்றனர். அதே நேரத்தில் சிலர், அவர் எப்படியோ 3 பவுண்டரிகளும், 2 சிக்ஸரும் அடிச்சாரே அதுவே போதும் என்றும் கமெண்ட் செய்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News April 1, 2025
கூந்தலை துண்டித்து போராட்டம்

கேரளாவில் தேசிய சுகாதாரப் பணியாளர்களின் (ASHA) போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ரிட்டயர்மென்ட் பெனிபிட், பணிநிரந்தரம், மருத்துவ வசதி, ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை கோரி அவர்கள், திருவனந்தபுரத்தில் கடந்த 50 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் கோரிக்கைகளை ஏற்காத நிலையில், தங்கள் கூந்தலை வெட்டியும், மொட்டையடித்தும் இவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
News March 31, 2025
மும்பை அணி அபார வெற்றி…!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, 116 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. மும்பையின் அறிமுக பௌலர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து, எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பையில், ரிக்கெல்டன்(62*) அதிரடியாக அரைசதம் விளாசினார். இதனால், அந்த அணி எளிதில் வெற்றிபெற்றது.
News March 31, 2025
நிர்வாணமாக நடித்த சூப்பர் ஸ்டாரின் மகன்

ஹாலிவுட் முன்னாள் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் சுவாஸநெகரின் மகன் பாட்ரிக்கின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை வழியில் நடிப்பை தேர்ந்தெடுத்தாலும், ஆக்ஷனில் இறங்காமல் நடிப்பை வெளிப்படுத்தும் படங்கள், சீரிஸ்களில் நடித்து வருகிறார் பாட்ரிக். அண்மையில் அவர் நடித்துள்ள ‘ஒயிட் லோட்டஸ்’ சீரிஸில் ஒரு காட்சியில் முழு நிர்வாணமாக நடித்துள்ளார். தன் மகனின் ஆர்வத்தை அர்னால்ட்டும் பாராட்டியுள்ளார்.