News October 4, 2025
கரூர் சென்ற CM கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்? நயினார்

கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்கு செல்லாத பாஜக, கரூருக்கு ஓடோடி வந்தது ஏன் என்று <<17901865>>CM கேட்ட கேள்விக்கு<<>> நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். ஒரே இரவில் கரூருக்கு சென்ற CM, கள்ளக்குறிச்சிக்கும், வேங்கைவயலுக்கும் இன்று வரை செல்லாதது ஏன் என்று அவர் கேட்டுள்ளார். ஓட்டுக்காக கரூரில் போட்டோஷூட் நாடகமாடும் DMK-வுக்கு, மக்கள் துயரைப் போக்க விரைந்த BJP-ஐ குறைகூற எந்தத் தகுதியும் இல்லை எனவும் சாடியுள்ளார்.
Similar News
News October 4, 2025
35 வயதிற்கு மேல் ஆண்கள் இதை கட்டாயமா செய்யணும்!

35 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். டெய்லி 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்யத்தை மேம்படுத்த ஈசியான வழி. எடை குறைப்பதற்கும் நடைபயிற்சி முக்கியமானதாகும். ரத்த ஓட்டம் சீராவதால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி இதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்!
News October 4, 2025
BREAKING: இபிஎஸ்க்கு அனுமதி மறுப்பு

நாளை திருச்செங்கோடு, குமாரபாளையத்திலும், நாளை மறுநாள் நாமக்கல், பரமத்திவேலூரிலும் ரோடு ஷோ செல்ல இபிஎஸ் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கரூர் துயர வழக்கில் நெடுஞ்சாலைகளில் பரப்புரை செய்ய அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி, இபிஎஸ் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து, பரப்புரை கூட்டத்துக்கான மாற்று இடத்தை தேர்வு செய்ய இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது.
News October 4, 2025
இத கண்டிப்பா குழந்தைக்கு சொல்லி கொடுங்க!

குழந்தைகளை குறிவைத்து சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விஷயங்களை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க *தெரியாதவர்களிடம் தகவல்களை பகிரக்கூடாது *தெரியாத வெப்சைட்டின் Link-களை கிளிக் செய்யக்கூடாது *ஆன்லைனில் நடைபெறும் பண குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பிள்ளைகளின் போனில் Parenting Control ஆப்ஷன் ஆன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். SHARE IT.