News September 15, 2024
பாமகவை அழைக்காதது ஏன்? விசிக பதில்

மது ஒழிப்பு மாநாட்டிற்கு பாமகவை அழைக்காதது ஏன் என்பது குறித்து விசிக விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி துணை பொது செயலாளர் S.S. பாலாஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பாமக பேசும் மது ஒழிப்பில் விசிகவுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார். சாதிய அரசியலால் ஏற்பட்டுள்ள அவப்பெயரை மறைக்க மது ஒழிப்பு குறித்து பாமக பேசுகிறது, அதனாலேயே சாதிய, மதவாத கட்சிகளை அழைக்கவில்லை என்றார்.
Similar News
News December 21, 2025
காந்தி மீண்டும் கொல்லப்பட்டுள்ளார்: ப.சி.,

<<18603421>>100 நாள் வேலைவாய்ப்பு<<>> திட்டத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர், காந்தியின் பெயரை விட பொருத்தமானதா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். பெயரை நீக்கியதன் மூலம் 77 ஆண்டுகளுக்கு பின் காந்தி மீண்டும் கொல்லப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ED சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த அவர், பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
News December 21, 2025
25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நெல்லையப்பர் வெள்ளித்தேர்!

வரும் ஜனவரியில் நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் மீண்டும் ஓடும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெல்லை அரசு விழாவில் பேசிய அவர், கலைஞர் வழியில் இக்கோவிலுக்கு ஏராளமான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, 1991-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் எரிந்த வெள்ளி தேர் மீண்டும் ஓடும் என நான் அறிவித்தேன். அதன்படி, வரும் ஜனவரியில் வெள்ளித்தேர் மீண்டும் ஓடும் என உறுதியளித்துள்ளார்.
News December 21, 2025
ஆண்டுக்கு ₹5 லட்சம் இலவச காப்பீடு பெறுவது எப்படி?

<


