News October 24, 2025
டெஸ்டில் இருந்து விலகியது ஏன்? ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம்

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியது ஏன் என்பதற்கு இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார். தனக்கு முதுகுப் பிரச்சினை இருப்பதை தெரிவித்த அவர், அதன் காரணமாக தன்னால் தொடர்ந்து 2 நாள்கள் பீல்டிங் செய்ய முடிவதில்லை என கூறினார். இதனாலேயே டெஸ்டில் ஓய்வு எடுத்துள்ளதாக கூறிய அவர், ஆனால் ODI-ல் ஒரு நாள் பீல்டிங் செய்த பிறகு, மீண்டுவர நேரம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
Similar News
News October 24, 2025
நாடு முழுவதும் நாளை முடங்குகிறது

SBI வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? நாடு முழுவதும் நாளை(அக்.25) மதியம் 1.10 மணிக்கு வங்கியின் UPI, IMPS, YONO ஆகிய இணைய சேவைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக NEFT & RTGS சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மீண்டும் மதியம் 2:10 மணிக்கு இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த இடைப்பட்ட நேரத்தில் ATM & UPI லைட் சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE.
News October 24, 2025
ஏன் நனைகிறது நெல் மூட்டைகள்? என்னதான் தீர்வு?

‘நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்’. இது, பருவ மழை காலத்தில் அதிகம் பார்க்கப்படும் செய்தி. அறுவடைக்கு பிறகு நெற்பயிர்களை, அரசு கொள்முதல் செய்வதற்கு முன் சேமித்து வைக்க உருவாக்கப்பட்ட இடமே நெல் சேமிப்பு கிடங்கு. இங்கு வைக்கப்பட்டும், நெல் மூட்டைகள் நனைவதற்கு காரணம் என்ன என்று தெரியுமா? அது பற்றியும், நெல் நனையாமல் இருப்பதற்கான தீர்வுகள் பற்றியும் அறிய மேலே ஸ்வைப் பண்ணுங்க.
News October 24, 2025
பெரிய PDF-களை படிக்க கஷ்டமா இருக்கா? இதோ Solution

மாணவர்களே, பெரிய பெரிய PDF-களை படிக்க நேரமே இல்லையா? உங்களுக்காகவே ‘ChatPDF’ என்ற AI Tool இருக்கிறது. இந்த AI Tool-ல் உங்கள் PDF-ஐ அப்லோடு செய்தால் போதும். உங்களுக்கு பதில் அதுவே முழு PDF-ஐ படித்து முடித்துவிடும். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை பற்றி அதனிடம் கேள்வியாக கேளுங்கள். அது, PDF-ல் இருக்கும் பதில்களையும், அதற்கான விளக்கத்தையும் அளிக்கும். மாணவர்கள் படிப்புக்கு உதவும், SHARE.


