News April 12, 2024
கோவை தொகுதியில் விலகியது ஏன்?

கோவை தொகுதியில் அண்ணாமலைக்கு பிரசாரம் செய்ய முடியாது என்று பாமக அறிவித்துள்ளது. அதற்கு காரணங்களாக (1) வேட்பாளர் பாமக அலுவலகத்திற்கு வரவில்லை (2) வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு பாமகவை அழைக்கவில்லை (3) வேட்புமனு தாக்கலுக்கு பாமகவை அழைக்கவில்லை (4) பாஜக பிரசாரங்களுக்கு பாமகவுக்கு அழைப்பு இல்லை (5) பாஜக பொறுப்பாளர் கூட்டணி தலைவர்களை மதிப்பதில்லை என்று பாமக பட்டியலிட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
மாலை 6 மணி வரை முக்கியச் செய்திகள்

*ராமதாஸின் லெட்டர்பேடில் இருந்து அன்புமணி பெயர் நீக்கம். *உயிரிழந்த காவலாளி <<16966859>>அஜித்குமாரின்<<>> தம்பி நவீன்குமார் ஹாஸ்பிடலில் அனுமதி. *அதிமுக – பாஜக பொருந்தா கூட்டணி என திருமாவளவன் பேச்சு. *உத்தரகாண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அம்மாநில CM புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டார். *2-வது டெஸ்ட்டின் கடைசி நாளில் இந்தியாவின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறும் இங்கிலாந்து.
News July 6, 2025
இரு சமுதாயங்கள் சேர்ந்தால் ஆளலாம்: அன்புமணி

வன்னியர் & பட்டியலின சமுதாயம் சேர்ந்தால் தமிழகத்தை நாம் ஆளலாம் என அன்புமணி தெரிவித்துள்ளார். மறைந்த BSP Ex தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தலில் பேசிய அவர், சமீபத்தில் தனக்கு கிடைத்த தரவுகளின்படி 62 MLA தொகுதிகளில் அதிகம் இருப்பது வன்னியர் சமுதாயம். 42 தொகுதிகளில் இருப்பது பட்டியிலின சமுதாயம் என்றும் குறிப்பிட்டார். அம்பேத்கர், பெரியார் வழியில் தங்களை ராமதாஸ் வழிநடத்தியாகவும் அவர் கூறியுள்ளார்.
News July 6, 2025
நடிகை கைலி பேஜ் மரணம்.. போதை மருந்து காரணமா?

ஆபாச படங்களில் நடித்து பிரபலமடைந்த இளம் நடிகை கைலி பேஜ்(28) கடந்த 3-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் சடலமாக கிடந்தார். 2016 முதல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட இவருக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர். இந்நிலையில், TMZ சினிமா வலைத்தள தகவலின்படி அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்ததே உயிர்போக காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. Say no to drugs