News September 5, 2024
விஜய்க்கு ஆதரவாக பேசியது ஏன்? தமிழிசை விளக்கம்

தவெகவிற்கான அங்கீகாரத்திற்கும், மத்திய அரசுக்கும் தொடர்பில்லை என தமிழிசை செளந்தரராஜன் கூறினார். தேர்தல் ஆணையம் தான் அதனை முடிவு செய்யும் என்று கூறிய அவர், அரசியலுக்கு புதியவர் என்பதால் விஜய்க்கு ஆதரவாக பேசியதாக விளக்கமளித்தார். புதிய தம்பிக்கு கொடுத்த ஆதரவு என்பது கூட்டணிக்கான அழைப்பு அல்ல என்றும் மறுப்பு தெரிவித்தார். முன்னதாக, விஜய் கட்சியை பார்த்து திமுக பயப்படுவதாக அவர் விமர்சித்திருந்தார்.
Similar News
News August 4, 2025
ஷாருக்கானுக்கு எதன் அடிப்படையில் விருது? ஊர்வசி

மலையாளத்தில் ஊர்வசிக்கும், விஜயராகவனுக்கும் சிறந்த துணை நடிகர், நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இதுபற்றி பேசிய ஊர்வசி, ஷாருக்கானுக்கு எதன் அடிப்படையில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது, அதேசமயம் தங்களுக்கு ஏன் சிறந்த நடிகர், நடிகை பிரிவில் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். தாங்களும் பாடுபட்டுதான் நடிப்பதாக கூறிய அவர், அரசு தரும் விருது ஓய்வூதியம் அல்ல என்றும் சாடியுள்ளார்.
News August 4, 2025
நடிகர் மதன் பாப் மரணம்.. இறந்த பிறகும் சோகம்

தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிய <<17291927>>மதன் பாப்(71)<<>> மறைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்திருந்தபோதும், அவர்கள் யாரும் மதன் பாப்பின் இறுதி அஞ்சலியில் பங்கேற்கவில்லை. திரை பிரபலங்களில் சிலர் மட்டுமே அஞ்சலி செலுத்தினர். இதில் கூட சின்ன நடிகர், பெரிய நடிகர் என பாரபட்சமா என ரசிகர்கள் சாடி வருகின்றனர். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?
News August 4, 2025
மீண்டும் மாநிலமாகிறதா காஷ்மீர்?

நேற்று PM மோடி, அமித்ஷா இருவரும் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்தனர். மேலும், காஷ்மீரின் முஸ்லிம், பாஜக தலைவர்கள், லடாக் கவர்னர் ஆகியோரை அமித்ஷா சந்தித்துள்ளார். சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து J&K, லடாக் யூ.பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட 6-வது ஆண்டு தினம் நாளை வருகிறது. இந்த பின்னணியில் பார்க்கையில், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.