News August 15, 2024
பதவியை ராஜினாமா செய்தது ஏன்? குஷ்பு விளக்கம்

மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புவதாக குஷ்பு தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து விளக்கமளித்த அவர், NCW பதவி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவும், அந்த பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதால், தற்போது சுதந்திரமாக செயல்பட முடியும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
Similar News
News August 16, 2025
₹8,700 கோடி நஷ்ட ஈடு கேட்கும் மெலனியா டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிராக, தற்போதைய அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு எதிராக ஹண்டர் பைடன் அவதூறு பரப்பியதாக கூறி ₹8,700 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். முன்னதாக, அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தான் டிரம்ப்பிற்கு மெலனியாவை அறிமுகப்படுத்தியதாக ஹண்டர் பேசியிருந்தார்.
News August 16, 2025
ராசி பலன்கள் (16.08.2025)

➤ மேஷம் – நலம் ➤ ரிஷபம் – நன்மை ➤ மிதுனம் – நற்செய்தி ➤ கடகம் – தடங்கல் ➤ சிம்மம் – ஆர்வம் ➤ கன்னி – சாந்தம் ➤ துலாம் – செலவு ➤ விருச்சிகம் – குழப்பம் ➤ தனுசு – வெற்றி ➤ மகரம் – விவேகம் ➤ கும்பம் – இரக்கம் ➤ மீனம் – இன்பம்.
News August 16, 2025
கோலி மட்டும் அப்படி செய்தால்.. ஸ்ரீசாந்த் உறுதி

கோலியின் Aggression தான் அவரது முழு பலம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். கோலியின் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை தான் அவரது இன்றைய வெற்றிக்கு காரணம் எனவும், அவர் தனது Aggressive மனப்பான்மையை குறைத்தால், வெற்றிகரமான வீரராக இருந்திருக்க மாட்டார் என்றும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். மேலும், அது கோலியின் கோபமல்ல, கிரிக்கெட் மீதான Passion என்று தெரிவித்துள்ளார்.