News September 28, 2025
நெரிசலான இடத்தை ஒதுக்கியது ஏன்? அதிமுக

விசாலமான கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில் விஜய்க்கு, அதிமுகவுக்கு போலீஸ் அனுமதியளிக்கவில்லை என அதிமுக MP இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார். நெரிசலான வேலுசாமிபுரத்தை எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இடவசதியுள்ள ரவுண்டானா பகுதியில் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி எனவும் கேட்டுள்ளார்.
Similar News
News September 28, 2025
WhatsApp-க்கு போட்டியாக வந்தது ‘ARATTAI’

வாஸ்ட்ஆப் வந்தபின், SMS மறந்தேவிட்டது. அந்த அளவுக்கு மக்களின் போன்களில் அது இடம்பிடித்துவிட்டது. இந்நிலையில், இந்தியாவின் ZOHO நிறுவனம் அரட்டை (Arattai) என்ற மெசேஜிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது. வீக் சிக்னலிலும் தடையின்றி செயல்படும், பேசிக் ஸ்மார்ட்போன்களில் கூட வேலை செய்யும், சிறந்த செயல்பாடு இதன் சிறப்பம்சங்களாக கூறப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய செயலியான இது, வாட்ஸ்ஆப்பை வெல்லுமா?
News September 28, 2025
9-வது முறை கோப்பையை தூக்குமா இந்தியா?

ஆசிய கோப்பையின் பைனலில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதுவரை இந்தியா 8 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கோப்பை வென்றுள்ளன. நடப்பு தொடரில் தோல்வியே பெறாத அணி என்ற பெருமையுடன் இந்தியா உள்ளது. ஆனால் பாகிஸ்தான் ஏற்ற இறக்கங்களுக்கு பிறகே பைனலுக்கு சென்றது. இந்தியாவுக்கே சாதகமான சூழல் இருந்தாலும், இலங்கையுடன் ஏற்பட்ட தடுமாற்றத்தை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
News September 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 472 ▶குறள்: ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
▶பொருள்: ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.