News January 31, 2025

திருமாவளவனை சந்தித்தது ஏன்? ஆதவ் அர்ஜூனா விளக்கம்

image

திருமாவளவனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விளக்கமளித்துள்ளார். திருமாவளவனும், தானும் எதிரெதிர் துருவம் இல்லை என்றும், ஒரே கொள்கையில் தொடர்ந்து பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவருடைய அறிவுரைகளை எடுத்துக்கொண்டு, அதை எதிர்கால அரசியல் செயல்பாடுகளில் பயன்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News March 3, 2026

புத்தகம் சுமந்த பிஞ்சுகள்.. புதைக்குழிக்குள்..

image

இங்கு தோண்டப்பட்டுள்ள குழிகளில் பல சிரிப்புகள் புதையவுள்ளன. ஈரானில் பெண்கள் பள்ளி மீது நடந்த தாக்குதலில் பலியான மாணவிகளை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழிகள் இவை. பள்ளிக்கு சிரித்த முகத்துடன் சென்ற குழந்தைகளின் உயிரற்ற உடல்களை பார்த்து பெற்றோர்கள் <<19277394>>கதறி அழுத காட்சி<<>> நெஞ்சை உலுக்குகிறது. அதிகார வெறிக்காக நடக்கும் போரில் ஏன் எந்தப் பாவமும் அறியாத குழந்தைகளும், அப்பாவி மக்களும் பலியாக வேண்டும்?

News March 3, 2026

சங்கீதாவுக்கு இதை செய்யவில்லை.. விஜய் REWIND

image

விஜய் – சங்கீதா விவகாரம் பேசுபொருளான நிலையில், NDTV-க்கு அளித்த பழைய பேட்டியில் விஜய் பேசியது வைரலாகிறது. அதில், திருமணத்திற்கு முன்பு தனக்கு நிறைய பரிசுகளை சங்கீதா கொடுப்பார். ஆனால், திருமணத்திற்கு பிறகு அவை குறையத் தொடங்கின. காரணம், நான் அவர் கொடுக்கும் பரிசுகளுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என விஜய் கூறியுள்ளார். தன்னை அதிகளவில் புரிந்துகொண்டு நடப்பவர் சங்கீதா என்றும் தெரிவித்துள்ளார்.

News March 3, 2026

கூட்டணியை இறுதி செய்ய காங்கிரஸ் தீவிரம்..

image

கூட்டணியை உறுதி செய்ய காங்கிரஸ் கட்சியினர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம், ஸ்டாலினை சிதம்பரம் சந்திக்க இருக்கும் நிலையில், மறுபுறம் கார்கே, சோனியா காந்தி, ராகுல், கே.சி.வேணுகோபால் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக 11 மணி முதல் ஆலோசனை செய்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக தேர்தல், திமுக கூட்டணியில் இருந்து விலகினால் ஏற்படும் சாதகம், பாதகம் குறித்து தீவிரமாக ஆலோசிக்கின்றனர்.

error: Content is protected !!