News March 15, 2025
சபாநாயகரை சந்தித்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்

சபாநாயகர் அப்பாவுவை அதிமுக EX அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இபிஎஸ்சுடன் கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில் நடந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தொகுதி பிரச்னை தொடர்பாக அப்பாவுவை சந்தித்ததாகவும், சபாநாயகரை எம்எல்ஏக்கள் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்றார்.
Similar News
News July 4, 2025
VCK பெண் கவுன்சிலர் சரமாரியாக வெட்டிக் கொலை!

திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறி VCK பெண் கவுன்சிலரை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநின்றவூர் நகராட்சியின் 26-வது வார்டு கவுன்சிலராக கோமதி இருந்து வந்தார். அவர் ஆண் நண்பருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவரது கணவர் ஸ்டீபன் ராஜ், கோமதியை தலை, முகம், கை பகுதிகளில் சரிமாரியாக வெட்டியுள்ளார். அதில் ஒரு கை துண்டாகியுள்ளது.
News July 4, 2025
ஸ்டார் வார்ஸ் நடிகர் கென்னத் கோலி காலமானார்

‘The Empire Strikes Back’, ‘Return of the Jedi’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்த ஹாலிவுட் நடிகர் கென்னத் கோலி(87) காலமானார். கொரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. Star Wars படங்களின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற கென்னத் கோலிக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News July 4, 2025
காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ₹10 லட்சத்திற்கான காசோலையையும், பாராட்டுச் சான்றிதழையும் ஆகஸ்ட் 15-ம் தேதி CM ஸ்டாலின் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணிய தென்றல் காயிதே மில்லத் காலம் முதல் தொடர்ந்து சமூக நல்லிணக்கம் பரப்பி வரும் சிந்தனையாளர் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.