News January 2, 2025

ரஜினியை சந்தித்தது ஏன்? ஓபிஎஸ் விளக்கம்

image

ஓபிஎஸ் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பின்புலத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல் கணக்கு, பாஜக கூட்டணி உள்ளிட்ட அரசியல் காரணங்கள் உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சந்திப்பு குறித்து விளக்கமளித்த ஓபிஎஸ், மரியாதை நிமித்தமாகவே ரஜினியை சந்தித்ததாகக் கூறினார். அரசியல் ரீதியாக எந்த விவாதமும் தங்களுக்கு இல்லை எனவும், அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

Similar News

News January 26, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 592 ▶குறள்: உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். ▶பொருள்: ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.

News January 26, 2026

2026, 2031-ல் திமுக ஆட்சி தான்: ராஜ கண்ணப்பன்

image

பார்லிமெண்ட் தேர்தலில் PM மோடி 8 முறை தமிழகத்திற்கு வந்தார். அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சித்துள்ளார். மேலும், 2026, 2031-ல் திமுக தான் மீண்டும் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றவர், சுதந்திரம் அடைந்து மக்களுக்கு தேவையான குடிநீர், பாசனம், போக்குவரத்து, உணவு, கல்வி என அனைத்தும் திமுக ஆட்சியில் தான் சீர் செய்யப்பட்டுள்ளது எனவும் பேசியுள்ளார்.

News January 26, 2026

சிஷ்யனை கிண்டலடித்த யுவராஜ் சிங்

image

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20-யில் அபிஷேக் சர்மா வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 2007-ல் இங்கி., அணிக்கு எதிராக இந்திய Ex வீரர் யுவராஜ் சிங் 12 பந்தில் அதிவேக அரைசதம் கண்டதே இன்றளவும் உலக சாதனையாக உள்ளது. இந்நிலையில் யுவராஜ், இன்னும் உங்களால் 12 பந்துகளில் 50 ரன்கள் அடிக்க முடியவில்லையே என ஜாலியாக சீண்டியதுடன், தொடர்ந்து இதுபோல் சிறப்பாக ஆடுங்கள் எனவும் பாராட்டியுள்ளார்.

error: Content is protected !!