News September 30, 2025
கரூரில் இருந்து புறப்பட்டது ஏன்? விஜய் பதில்

கரூரை விட்டு புறப்பட்டதற்கான காரணத்தை விஜய் விளக்கியுள்ளார். நானும் மனுஷன் தான். அந்த நேரத்தில் அத்தனை பேர் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த போது, எப்படி என்னால் ஊரை விட்டு கிளம்பி வர முடியும் என்று இருந்தேன். ஆனால், நான் சம்பவ இடத்திற்கு மீண்டும் சென்றிருந்தால் அதை காரணம் காட்டி, வேறொரு பதட்டமான சூழல் உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே அதை தவிர்த்துவிட்டதாக விஜய் கூறியுள்ளார்.
Similar News
News March 11, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹5,000.. அரசின் புதிய அப்டேட்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்து, பின்னர் மேல்முறையீடு செய்த பல லட்சம் பேருக்கு இம்மாதம் ₹5,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் மட்டத்தில் விசாரிக்கையில், கடந்த பிப்.28 வரை மாவட்ட வாரியாக தகுதி வாய்ந்தோர் பட்டியலை அரசு பெற்றுள்ளதாக கூறினர். ஏற்கெனவே 1.31 கோடி பேர் உதவித்தொகை பெறும் நிலையில், 4-5 லட்சம் பேர் கூடுதலாக இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
News March 11, 2026
கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியது SC

4-வது மாடியில் இருந்து விழுந்ததால் 13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஹரிஷ் ரானாவை (31) கருணைக்கொலை செய்ய SC அனுமதித்துள்ளது. இவரது உடல்நலனில் முன்னேற்றமும் இல்லை என டாக்டர்கள் கூறிய நிலையில், கண்ணியமான முறையில் கருணைக்கொலை செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் கருணைக்கொலை தொடர்பான சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
News March 11, 2026
1960-ல் ஒரு LPG சிலிண்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

கடந்த 60 ஆண்டுகளில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. 1960-ல் ₹10 வரை மட்டுமே இருந்த விலை, 2026-ல் ₹928-ஐ எட்டியுள்ளது. 1990-ல் ₹120 ஆகவும், 2010-ல் ₹400 ஆகவும் இருந்த விலை, இன்று சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. சர்வதேச எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள், மாறிவரும் மானியக் கொள்கைகள் மற்றும் பணவீக்கம் காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


