News September 5, 2025
டெல்லி சென்றது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்

பாஜக அழைத்ததால்தான் டெல்லி சென்று தலைவர்களை சந்தித்ததாக செங்கோட்டையன் கூறியுள்ளார். கட்சித் தலைமைக்கு தெரியாமல் அவர் டெல்லி சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். இதன் மூலம், அதிமுகவை ஒன்றிணைக்க BJP முயல்வதாக கூறப்படுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உங்கள் கருத்து என்ன கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News March 12, 2026
திருப்பத்தூர்: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

திருப்பத்தூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 12, 2026
பணிப்பெண்ணிடம் தவறாக நடக்கவில்லை: பாக். வீரர்

இலங்கையில் <<19302700>>ஹோட்டல் பணிப்பெண்ணிடம்<<>> தவறாக நடந்து கொண்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் வீரர் சல்மான் மிர்சா மறுத்துள்ளார். மேலும், தவறான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், தவறாக செய்தி வெளியிட்ட பாக். ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். T20 உலகக் கோப்பை தொடரின் போது நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
News March 12, 2026
BREAKING: வீட்டு சிலிண்டர்.. மக்களுக்கு மேலும் அதிர்ச்சி

கிராமப்புற மக்களுக்கு 45 நாள்களுக்கு ஒருமுறையே கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அறிவித்துள்ளது. அதேநேரம், நகர்ப்புறங்களில் 25 நாள்களுக்கு ஒரு சிலிண்டர் என்ற அடிப்படையில் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேஸ் தட்டுப்பாட்டை சமாளிக்க மாநிலங்களுக்கு கூடுதலாக 40,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


