News September 28, 2025
அந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தீங்க: பிரேமலதா

தவெக பிரசாரத்துக்கு குறுகலான சாலையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த இடம், அந்த கூட்டத்திற்கு பத்தாது என கூறிய அவர், இக்கூட்டம் ஒரு தவறான உதாரணம். இனி இதுபோல நடக்கக்கூடாது என வலியுறுத்தினார். மேலும், இந்த விஷயத்தில் அரசியல் பேசுவதை விட, பாதிக்கப்பட்டவர்களுக்காக களத்தில் நிற்க வேண்டும் எனவும் தானும் கரூருக்கு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 15, 2026
பெண்ணின் திருமண வாழ்க்கையை முறித்த பொய்

பொய்யான தகவல்களை சொல்லி நடந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்க முடியும் என்று ஜார்க்கண்ட் HC தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில், திருமணத்தில் உண்மைகளை மறைப்பது வாழ்க்கை துணையை மனரீதியாக கொடுமைப்படுத்துவதற்குச் சமம் என்றும் கோர்ட் கூறியுள்ளது. இந்த வழக்கில், உண்மையை மறைத்து பெண் திருமணம் செய்தது உறுதியானதால், கணவர் கோரிய விவாகரத்தை வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. இதுபற்றி உங்க கருத்து?
News January 15, 2026
9 பாகிஸ்தான் மீனவர்கள் அதிரடி கைது

இந்திய கடற்பகுதியில் சட்ட விரோதமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 9 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் (ICG) அதிரடியாக கைது செய்துள்ளனர். அத்துடன், அவர்கள் பயன்படுத்திய மீன்பிடிப் படகையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் ICG விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.
News January 15, 2026
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? EPS

அதிமுக தலைமையிலான NDA கூட்டணி ஒன்றாகவே தேர்தலை சந்திக்கும் என்றும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்பதில் சந்தேகம் வந்துவிட்டதாகவும் EPS கூறியுள்ளார். மேலும், பொழுது போக்கிற்காக மட்டுமே திரைப்படம் என்றும், இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் திமுக – அதிமுக பிரியவில்லை. நம் முன்னோர்கள் தான் தமிழ்மொழி காக்க போராடினர். எனவே பராசக்தியை வைத்து கருத்து சொல்ல முடியாது எனவும் அவர் பேசியுள்ளார்.


