News October 1, 2025
2018ல் USA அரசு முடங்கியது ஏன்?

செலவினங்கள் தொடர்பான மசோதா செனட்டில் நிறைவேறாததால், <<17883569>>USA முடங்கியுள்ளது<<>>. இதேபோல 2018-ல், 35 நாட்களுக்கு முடங்கிப்போனது அந்நாட்டு அரசு. அப்போது, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்காக 5.7 பில்லியன் டாலர் நிதியை செனட் ஒதுக்கவில்லை. இதனால், டிச.22, 2018 – ஜன.25, 2019 வரை ஷட் டவுன் ஏற்பட்டது. USA வரலாற்றிலேயே அதிக நாட்கள் இந்த ஷட் டவுன் நீடித்ததால் 8 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
Similar News
News October 1, 2025
வங்கிகளுக்கு 8 நாள்கள் விடுமுறை

வழக்கம்போல் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் (அக்.5, 12, 19, 26) விடுமுறையாகும். அதேபோல், 2-வது, 4-வது சனிக்கிழமைகளிலும் (அக்.11, 25) வங்கிகள் செயல்படாது. மேலும், அக்.2 (நாளை விஜயதசமி), அக்.20 (தீபாவளி) ஆகிய நாள்களில் அரசு விடுமுறை என்பதால் வங்கிகள் இயங்காது. இதற்கேற்ப, கடன் தவணை செலுத்துதல், காசோலை தொடர்பான பணிகளை பிளான் பண்ணிக்கோங்க மக்களே! SHARE IT.
News October 1, 2025
சின்னத்திரை நயன்தாராவின் சிலிர்ப்பூட்டும் கிளிக்ஸ்!

டிரெண்டி போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை வாணி போஜன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அடர் பச்சை நிற உடையில் செம ஸ்டைலாக அவர் போஸ் கொடுத்துள்ளார். தேவதையின் தரிசனத்தை கண்ட ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிவதோடு, கமெண்டில் ஹார்ட்டின்களை பறக்கவிடுகின்றனர். சின்னத்திரை நயன்தாரா என வர்ணிக்கப்படும் வாணி போஜன், கடைசியாக சுந்தர் சியின் ‘கேங்கர்ஸ்’ படத்தில் நடித்து இருந்தார்.
News October 1, 2025
அ,ஆ எழுதும் ‘வித்யாரம்பம்’ செய்வதற்கு உகந்த நேரம்

விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யும் நிகழ்வு பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் கல்வியை தொடங்கினால், அதில் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை. அதன்படி 2 நல்ல நேரங்களில் காலை 7.45 முதல் 8.50 வரை, காலை 10.40 முதல் 12 மணி வரை குழந்தைகளுக்கான அ,ஆ எழுதும் வித்யாரம்பம் நடத்தலாம். உங்க வீட்டு குட்டீஸை நாளை பள்ளியில் கண்டிப்பாக சேருங்க..