News December 19, 2024
ரூபாய் மதிப்பு சரிந்தது ஏன்?

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் அறிவிப்பால் டாலருக்கு நிகரான <<14921105>> ரூபாயின் மதிப்பு<<>> முதல் முறையாக 85-ஐ கடந்து சரிந்தது. வட்டி வீதத்தை ஃபெடரல் வங்கி குறைக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த நிலையில், வெறும் 0.25% மட்டும் குறைத்ததுடன், பணவீக்கம் குறைய இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம் என நெகடிவ் கமென்ட்டையும் ஃபெடரல் வங்கி கொடுத்தது. இதனால், ரூபாய் உள்பட சில ஆசிய நாணயங்களின் மதிப்பு சரிந்துள்ளது.
Similar News
News March 3, 2026
இனியாவது திருந்துமா திமுக அரசு? நயினார்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி அளிப்பது பற்றி TN அரசு மார்ச் 4.ல் பதிலளிக்க மதுரை HC உத்தரவிட்டுள்ளது. இதை X பதிவில் சுட்டிக்காட்டியுள்ள நயினார், திமுக அரசு தனது தவறை உணர்ந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். இனியும் இந்துக்களின் உரிமையை முடக்க திட்டமிட்டால், கோர்ட் வழங்கும் இறுதிதீர்ப்பின் போது திமுக அரசு முற்றிலும் முடங்கும் என கூறியுள்ளார்.
News March 3, 2026
PM மோடி பொன்மொழிகள்!

*விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்வது தான் ஜனநாயகத்தின் அடித்தளம். விமர்சனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது *நம் ஒவ்வொருவரிடமும் நற்பண்புகளும் உள்ளன; தீயப் பண்புகளும் உள்ளன. நற்பண்புகள் மீது கவனம்செலுத்தி உழைப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறுகிறார்கள் *எதையாவது கனவு காண்பதற்குப் பதிலாக, மிகச் சிறந்தவற்றைச் செய்ய வேண்டுமென்று கனவு காணுங்கள்.
News March 3, 2026
மீண்டும் களமிறங்கும் கோலி, ரோஹித்

ஆப்கானிஸ்தான் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ODI போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில், போட்டி அட்டவணையை BCCI வெளியிட்டுள்ளது. விவரம்: டெஸ்ட் போட்டி (ஜூன்.6) – நியூ சண்டிகர். முதல் ODI (ஜூன்.14) – தரம்சாலா, 2-வது ODI (ஜூன்.17) – லக்னோ, 3-வது ODI (ஜூன்.20) – சென்னை. நீண்ட நாள்களுக்கு பிறகு ரோஹித், கோலி களமிறங்க உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


