News April 24, 2025
பிரதமர் பிஹார் சென்றது ஏன்? திருமா கேள்வி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை பிஹார் சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கு PM மோடி பயன்படுத்துவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். தாக்குதல் நடந்த இடத்திற்கு செல்லாமல் பிஹார் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி சென்றது அதிர்ச்சியளிப்பதாகவும், அது ஏன் எனவும் அவர் வினவியுள்ளார். மேலும், காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டிவிட்டதாக அமித் ஷா கூறிய பிறகுதான் இக்கொடூர நிகழ்வு நடந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News April 25, 2025
8-ம் வகுப்பு வரை ’ஆல் பாஸ்’

8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை கட்டாயம் பாஸ் செய்ய வேண்டும் என்று பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கவும், எந்தவித தடையும் இன்றி மாணவர்கள் அவர்களின் கல்வியை தொடரும் வகையிலும் 1 – 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் வழங்கப்படுகிறது.
News April 25, 2025
உறுதியான கலக்கல் காமெடி காம்போ..

சிம்பு ரசிகர்களுக்கு சந்தானம் குட் நியூஸ் ஒன்றை சொல்லியுள்ளார். பேட்டி ஒன்றில் ஒரு நாள் சிம்பு சார் எனக்கு போன் பண்ணி என்னுடைய படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். சிம்பு கேட்டால் முடியாது என்று சொல்ல முடியுமா?, அவர் கேட்டால் எப்போதும் சரி மட்டும் தான் என கூறியுள்ளார். இதன் மூலம் STR 49-ல் நடிப்பதை சந்தானம் உறுதி செய்துள்ளார். சிம்பு – சந்தானம் காம்போவில் உங்களுக்கு பிடித்தது?
News April 24, 2025
நாளையும் வெயில் கொளுத்தும் .. வெளியே வராதீங்க

வெயிலின் தாக்கத்தால் மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று கரூர், திருச்சி, மதுரை, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. நாளையும் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், காலை 11 முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.