News July 6, 2025
TVK டீமில் இருந்து PK விலகியது ஏன்? வெளியான காரணம்

விஜய்யின் கூட்டணி அறிவிப்பில் உடன்பாடில்லை என்பதாலேயே <<16952357>>பிரசாந்த் கிஷோர்<<>>(PK) தவெக தேர்தல் ஆலோசனைக் குழுவிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – தவெக கூட்டணி அமைத்து போட்டியிட PK விரும்பியதாகவும், அப்படி போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தவெக நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் நவ. மாதத்திற்கு பிறகு மீண்டும் TVK உடன் இணைய உள்ளாராம்.
Similar News
News July 6, 2025
போலீசையும் தண்டிக்கும் BNS 296 சட்டம் தெரியுமா?

நண்பர்களுடன் சாலையில் நின்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது அங்கு வரும் ஒரு போலீஸ்காரர் மரியாதை குறைவாக, ‘வாடா… போடா’ என பேசினால், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும். பாரதீய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 296 ஆபாசமாக பேசுதலுக்கு தண்டனையை வழங்குகிறது. குற்றம் என நிரூபிக்கப்பட்டால், 3 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது 1000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
News July 6, 2025
வெற்று விளம்பரத்திற்கு அரசின் பணம்: இபிஎஸ் காட்டம்

வெற்று விளம்பரம் செய்ய ஊராட்சி ஓன்றிய நிதியை செலவிட திமுக முனைப்பு காட்டுவதாக அரசுக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 4 ஆண்டுக் கால அலங்கோல ஆட்சியை மூடி மறைக்க வெற்று விளம்பரங்களை திமுக செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12,620 ஊராட்சிகளில் விளம்பரம் வெளியிட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இபிஎஸ் கூறியுள்ளார்.
News July 6, 2025
60 நாள்கள்; 9 மணி நேர தூக்கம்.. ₹9.1 லட்சம் வென்ற இளம்பெண்

‘Wakefit’ பெட் தயாரிப்பு நிறுவனம் நடத்திய போட்டியில் புனேவை சேர்ந்த பூஜா மாதவ்(22), 60 நாள்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 9 மணி நேரம் தூங்கி ₹9.1 லட்சம் வென்றுள்ளார். 4-வது ஆண்டாக இந்த ‘Sleep Champion of the Year’ போட்டி நடந்தது. நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் அப்ளை செய்த நிலையில் 15 பேர் மட்டுமே இறுதியாக தேர்வாகியிருந்தனர். இந்தாண்டு பரிசு வென்ற பூஜா UPSC தேர்வுக்கு தயாராகி வருகிறாராம்.