News August 24, 2024
சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை? ராகுல் பேச்சு

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் கட்டாயம் என ராகுல் காந்தி கூறியுள்ளார். உ.பியில் பேசிய அவர், போதுமான ஆற்றல், திறமை இருந்தும், இந்தியாவில் 90% மக்கள் அரசு அமைப்புகளில் அங்கமாக இல்லை என வேதனை தெரிவித்துள்ளார். அரசின் கொள்கை உருவாக்கத்துக்கு சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் முக்கியம் என்ற அவர், இறுதிவரை போராடி காங்கிரஸ் கட்சி அதனை நிறைவேற்றும் என உறுதியளித்தார்.
Similar News
News October 17, 2025
ராசி பலன்கள் (17.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 17, 2025
கண்துடைப்புக்காக கட்டணம் குறைப்பு: நயினார் நாகேந்திரன்

தீபாவளிக்காக அனைவரும் ஒரு மாதம் முன்பே டிக்கெட் புக் செய்திருந்த போது, காலங்கடந்து ஆம்னி பேருந்து கட்டணத்தை திமுக குறைத்துள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதனால் யாருக்கு என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், முன்னரே திட்டமிட்டு கட்டணத்தை நெறிபடுத்தாதது, திமுக அரசின் திறனில்லாத நிர்வாகத்தையே காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
News October 16, 2025
₹13,430 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் PM

ஆந்திரா வருகை தந்துள்ள PM மோடி, அம்மாநிலத்திற்கான ₹13,430 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழில்துறை, மின்சாரம், சாலைகள், ரயில்வே, பாதுகாப்பு உற்பத்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய துறைகள் சார்ந்த திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரும் பங்கேற்றனர்.