News February 26, 2025

Why Bro Telling Lies? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி

image

மேடையில் வீர வசனம் பேசும் விஜய், தனது வாழ்க்கையில் அதுபோல் நடக்கிறாரா என அண்ணாமலை வினவியுள்ளார். மும்மொழிக்கு எதிராகப் பேசும் விஜய் தனது பிள்ளைகளுக்கு மட்டும் அந்த வாய்ப்பை வழங்கிவிட்டு, தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இருமொழி போதும் என்பது நியாயமா என்றார். மேலும், What Bro its Wrong Bro என விஜய் கூறிய டயலாக்கை போல் Why bro telling lies bro? நீங்கள் பொய் சொல்லலாமா ப்ரோ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News March 5, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 5, மாசி 21 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்

News March 5, 2026

கேழ்வரகு கூழ் குடிக்கிறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க

image

கோடை வெயிலில் தாகத்தை தணிக்க கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. இவை இரண்டுமே உடலுக்கு நன்மை என்றாலும், கேழ்வரகு கூழை அளவோடு குடிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஏனெனில் கேழ்வரகில் கூழ் காய்ச்சி குடித்தால், அது நம் உடலின் ரத்தத்தில் மிக விரைவாக சர்க்கரையாக மாறி விடுமாம். எனவே, இதை சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News March 5, 2026

இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா?

image

இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கி அழித்தது. இதனால், ஈரானுக்கு எதிராக இந்திய துறைமுகங்களை USA பயன்படுத்துவதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறையின் முன்னாள் ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகோர் குற்றஞ்சாட்டியிருந்தார். இது அடிப்படை ஆதாரமற்றது என மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தவறான தகவல் பரப்பியதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!