News August 17, 2024
எதுக்குங்க குண்டர் சட்டம் போடுறீங்க?

குண்டர் சட்டம் குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. வங்கிகளில் ரூ.3.30 கோடி வாங்கி மோசடி செய்ததாக செல்வராஜ் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், “முதலில் குண்டர்கள் யார் என்று தமிழக அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். சர்வ சாதாரணமாக குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Similar News
News January 15, 2026
ஆழ்ந்த உறக்கத்தின் 6 நன்மைகள்

ஆழ்ந்து உறங்குவதால் உடலும் மனமும் புத்துணர்வு பெறுகிறது. தூக்கத்தில் உடல் மட்டுமல்ல மனமும் இளைப்பாறுகிறது. இதனால் *கவனக் குவிப்பு திறம் மேம்படுகிறது *நினைவாற்றல் சிறப்பாக செயல்படுகிறது *படைப்பாற்றல் திறன் வளர்கிறது *சிறப்பாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது *எதிர்மறை விஷயங்கள் குறைகிறது *நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
News January 15, 2026
நம்பர் 1-ல் சிங்கப்பூர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?

2026-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியா 2-வது இடத்தில் உள்ளன. பட்டியலில் இந்தியா 80வது இடத்தைப் பிடித்துள்ளது. 2025-ல் 85-வது இடத்தில் இருந்த இந்தியா, 5 இடங்கள் முன்னேறியுள்ளது. மேலும், தற்போது இந்தியர்கள் 55 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 15, 2026
ராசி பலன்கள் (15.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். அதிலும், நாளை பொங்கல் தினத்தில் உங்களுக்கான ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


