News September 12, 2025

வாட்டர் பாட்டில் மூடிகள் கலர் கலராக இருக்க காரணம்?

image

நாம் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில் மூடிகள் பல வண்ணங்களில் இருக்க காரணங்களை அறிந்து கொள்ளுங்கள். *நீலம்: இயற்கையான கனிம உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். *கருப்பு: ஆல்கலைன் நீர் அதாவது அதிக PH மதிப்பு கொண்டது. *வெள்ளை: பதப்படுத்தப்பட்ட வடிகட்டிய நீர் இருக்கும். *பச்சை: சுவை சேர்க்கப்பட்ட தண்ணீரை கொண்டிருக்கும். *சிவப்பு: இதில் எலக்ட்ரோலைட் மேம்படுத்தப்பட்ட தாதுக்களை அடங்கிய நீர் இருக்கும். SHARE IT.

Similar News

News September 12, 2025

GALLERY: தமிழர்களும்.. துணை ஜனாதிபதி பதவியும்!

image

நாட்டிற்கு அதிக துணை ஜனாதிபதிகளை வழங்கிய மாநிலம் தமிழ்நாடுதான். இன்று துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு முன்பாக இருவர் அப்பதவியை அலங்கரித்துள்ளனர். இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன், 1952 முதல் 1962(10 ஆண்டுகள்) வரை பதவியில் இருந்தார். அவருக்கு அடுத்து, ஆர்.வெங்கட்ராமன் 1984 முதல் 1987(4 ஆண்டுகள்) வரை அப்பதவியில் இருந்தார்.

News September 12, 2025

இன்று ஒரே நாளில் ₹2,000 உயர்ந்தது

image

தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று (செப்.12) ஒரே நாளில் கிராமுக்கு ₹2 அதிகரித்து ₹142-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,000 அதிகரித்து ₹1,42,000-க்கும் விற்பனையாகிறது. ஹால்மார்க் அங்கீகாரம், தங்கத்துடன் ஒப்பிடுகையில் விலை குறைவு என்பதால் வெள்ளி நகைகளை வாங்குவதில் அண்மை காலமாக மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். SHARE IT.

News September 12, 2025

மகளிர் உலகக் கோப்பையில் 2 தமிழச்சிகள்

image

மகளிர் ODI உலகக் கோப்பை தொடர், செப்.30-ல் தொடங்குகிறது. முதல்முறையாக இந்த மகளிர் கிரிக்கெட் WC தொடரில் மகளிர் மட்டுமே அம்பயர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் தமிழர்கள் ஆவர். இந்தியா சார்பில் விருந்தா ரதியுடன் N ஜனனி, காயத்ரி வேணுகோபாலன் ஆகிய தமிழர்களும் கள மற்றும் டிவி நடுவர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்கள் பல சர்வதேச போட்டிகளிலும் நடுவர்களாகவும் இருந்துள்ளனர்.

error: Content is protected !!