News May 1, 2024
பெண் தலைவர்கள் ஏன் இல்லை?

இந்தியாவின் 500 முன்னணி நிறுவனங்களில் 25இல் மட்டுமே பெண்கள் CEOக்களாக இருக்கின்றனர். 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளில் ஒரு பெண் கூட இல்லை. பெண் தலைவர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் படைப்பாற்றல் (Creativity) அதிகரித்தாலும் மற்ற நிறுவனங்கள் பெண்களை ஏற்க மறுப்பது பிற்போக்குத்தனத்தைக் காட்டுகிறது. சமூக மாற்றத்திற்கு பெண்களை உயர் பதவிகளில் அமர வைக்க வேண்டியது அவசியமாகிறது.
Similar News
News February 4, 2026
திமுக எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்க: ஆதவ் அர்ஜுனா

கரூரில் தனியார் TV செய்தியாளர், ஒளிப்பதிவாளரை கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் ஸ்ரீரங்கம் MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஆதவ் அர்ஜுனா கோரிக்கை விடுத்துள்ளார். வீடியோ ஆதாரங்கள் இருந்தும் ஒருவாரமாக இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க அஞ்சுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக பழனியாண்டி மீது நடவடிக்கை எடுக்க திருச்சி MP துரை வைகோவும் வலியுறுத்தியிருந்தார்.
News February 4, 2026
கூட்டணியால் காங்., பலவீனம்: பிரவீன்

தமிழகத்தில் காங்கிரஸுக்கு 12% வாக்கு வங்கி இருக்கிறது; ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக கூட்டணி அரசியலால் காங்கிரஸ் பலவீனமாகி வருவதாக பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா, உ.பி., பிஹார் உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்., பலவீனமாகி வருகிறது என்ற எண்ணம் கட்சியினர் மத்தியில் வந்துவிட்டது; கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸின் உண்மையான பலமே வேறு எனவும் கூறியுள்ளார்.
News February 4, 2026
15 நாட்களில் 509 பெண்கள் மிஸ்ஸிங்!

தலைநகர் டெல்லியில் 2026-ம் ஆண்டின் முதல் 15 நாள்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் & சிறுமிகள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி போலீஸ் தரவுகளின்படி, 509 பெண்கள் உள்பட மொத்தம் 807 பேர் காணாமல் போனதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் இதுவரை 235 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் அங்கு சராசரியாக நாளொன்றுக்கு 54 பேர் மாயமாகியுள்ளனர்.


