News January 25, 2025
சிலிண்டர்களில் குறியீடுகள் இருப்பது ஏன்?

சிலிண்டரில் A2025 என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த சிலிண்டர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அர்த்தம். A-என்பது ஜனவரி-மார்ச், B-ஏப்ரல்-ஜூன், C-ஜூலை-செப்டம்பர், D-அக்டோபர்- டிசம்பர் மாதங்களை குறிக்கக்கூடிய காலக்கட்டங்கள் ஆகும். இதன்மூலம் சிலிண்டர் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். பரிசோதிக்கப்பட்ட பின், அடுத்த சோதனைக்கான தேதி சிலிண்டரில் ஒட்டப்படும்.
Similar News
News October 25, 2025
அஜித் குமார் மரணம்… அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

சிவகங்கை கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தை போலீஸ் தாக்கிய வீடியோவை வெளியிட்ட அவரது நண்பன் சக்தீஸ்வரனை கொலை செய்ய முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், மதுரையில் அவர் சென்ற வாகனம் மீது மற்றொரு வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News October 25, 2025
ரத்தத்தில் கையெழுத்து வாங்கும் RB உதயகுமார்

அக்.30-ல் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடைபெறவுள்ளது. இதில் EPS கலந்துகொள்கிறார். அவரை வரவேற்கும் விதமாக, ரத்தக் கையெழுத்து இயக்கத்தை RB உதயகுமார் தொடங்கியுள்ளார். முதலில் உதயகுமார், ரத்தத்தில் கைரேகை பதிவு செய்ததை தொடர்ந்து, நிர்வாகிகளும் பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், மதுரையில் தனது செல்வாக்கு நிலைத்து நிற்க, வீடியோ வாயிலான விமர்சனத்தையும் RB கையிலெடுத்துள்ளார்.
News October 25, 2025
இதெல்லாம் இந்தியா தந்த பரிசு

பண்டைய கால இந்திய கண்டுபிடிப்புகள் இன்றைய நவீன உலகிலும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் சில கண்டுபிடிப்புகள், உலகளவில் பரவலாக பயன்பாட்டில் உள்ளவை. இதேபோன்று, வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.


