News November 19, 2024
விமான ஐடியா யாருடையது ? – ஆளுநர் சர்ச்சை பேச்சு
விமானம் குறித்த அடிப்படை தத்துவத்தை முதலில் கண்டுபிடித்தது ரைட் சகோதரர்கள் அல்ல, பரத்வாஜ் முனிவர் என உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளார். லக்னோவில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஷ்டி யுனிவர்சிட்டியின் 9வது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், பண்டைய இந்தியாவில் முனிவர்கள் பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்துள்ளனர் எனக் கூறினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News November 19, 2024
செயற்கை மழைக்கு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்
டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக, டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார். காற்று மாசை குறைப்பதற்காக செயற்கை மழைக்கு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அனுமதி அளிக்காத பட்சத்தில் PM மோடி இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 19, 2024
‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்திற்கு வரிவிலக்கு
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்திற்கு ம.பி. பாஜக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வெளியான இப்படம், திட்டமிட்ட அரசியல் பிரசாரப் படம் என்ற விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்து வருவதாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் விமர்சித்துள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி இப்படத்தை பாராட்டியிருந்தார்.
News November 19, 2024
26ஆம் தேதி முதல் ஸ்டிரைக்: வருவாய்த்துறை அதிகாரிகள்
நவ.26 முதல் தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 2023இல் ஸ்டிரைக் செய்தபோது அமைச்சர்கள் பேச்சு நடத்தி, காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் இதுவரை அக்கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, 26ஆம் தேதி முதல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.