News March 30, 2024
கோப்பையை வெல்லப்போவது யார்?

மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு போபண்ணா – மாத்யூ எப்டன் ஜோடி முன்னேறியுள்ளது. அரையிறுதியில் ஸ்பெயினின் கிரானலர்ஸ், அர்ஜென்டினாவின் ஜபல்லோஸ் ஜோடியை எதிர்கொண்ட போபண்ணா ஜோடி 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்றது. பைனலில், இவான் – ஆஸ்டின் ஜோடியை போபண்ணா ஜோடி எதிர்கொள்கிறது. அதில் எந்த ஜோடி வெல்லுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே குறிப்பிடவும்.
Similar News
News November 3, 2025
வெள்ளி விலை ₹2,000 உயர்ந்தது

கடந்த மாத தொடக்கத்தில் கிடுகிடுவென உயர்ந்து மாத இறுதியில் சரிவை கண்ட வெள்ளி, நவ. மாதம் தொடங்கியது முதலே உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று(நவ.3) கிராமுக்கு ₹2 அதிகரித்து ₹168-க்கும், பார் வெள்ளி ₹1 கிலோவுக்கு ₹2,000 அதிகரித்து ₹1,68,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை இனி வரும் நாள்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதால், கடந்த மாதம் வாங்கி குவித்தவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
News November 3, 2025
திரிணாமுல் MLA மீது திடீர் தாக்குதல்

மே.வங்கத்தில் திரிணாமுல் MLA ஜோதிப்ரியா மல்லிக் வீட்டில், நேற்று இரவு புகுந்த இளைஞர் ஒருவர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மல்லிக் கூச்சலிட்டத்தை அடுத்து, பாதுகாப்பு ஊழியர்கள் விரைந்து வந்து, இளைஞரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அபிஷேக் தாஸ் என்ற அந்த இளைஞர், வேலைக்காக மல்லிக்கிடம் பேச வந்ததாக கூறியுள்ளார். அவர் ஏற்கெனவே மனநல சிகிச்சைக்கு பெற்று வருவதும் தெரியவந்துள்ளது.
News November 3, 2025
தைவானை சீனா ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது: டிரம்ப்

சமீபத்தில் தான் டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்று, அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகம் செய்வதில் ஒரு புரிதல் ஏற்பட்டது. இந்நிலையில், தைவானை சீனா ஆக்கிரமித்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பேட்டி ஒன்றில், தான் அதிபராக இருக்கும் வரை சீனா தைவானை ஆக்கிரமிக்காது என்றும், சீன அதிபர் விளைவுகள் பற்றி நன்றாக புரிந்து வைத்துள்ளார் எனவும் கூறினார்.


