News March 1, 2025
அரையிறுதியில் யாருடன் மோதும் இந்தியா..?

AUS vs AFG போட்டிக்கு பிறகு, பி குரூப்பில் ஆஸி. அணி முதல் இடத்திலும், 2வது இடத்தில் SAவும் உள்ளனர். ஏ குரூப்பில் நியூசி. அணி முதல் இடத்திலும், 2வது இடத்தில் இந்தியாவும் உள்ளன. கடைசி ஆட்டத்தில் இந்தியா நியூசி.யை வென்றால், கிட்டத்தட்ட ஆஸி. அணியுடன் தான் அரையிறுதியில் மோதும். அதே நேரத்தில், தோற்றால், SA அணியுடன் மோத அதிக வாய்ப்புகள் உள்ளன. யாருடன் இந்தியா அரையிறுதியில் மோதும். கமெண்ட் பண்ணுங்க?
Similar News
News March 19, 2026
‘அனிமேஷன்’ லெஜெண்ட் காலமானார்!

உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவர்ந்த ‘Anime’ கார்டூன் உலகின் லெஜெண்ட் சுடோமு ஷிபயாமா(84) காலமானார். நுரையீரல் புற்றுநோயுடன் நீண்ட காலம் போராடி வந்த அவர், மார்ச் 6-ம் தேதி உயிரிழந்ததாக ஜப்பானிய அனிமேஷன் நிறுவனமான ’Asia-Do’ அறிவித்துள்ளது. இவர் 1980-2004 வரையிலான காலகட்டத்தில், ‘டோரிமோன்’ மட்டுமின்றி குழந்தைகளுக்கான பல்வேறு அனிமேஷன் தொடர்களையும் இவர் இயக்கியுள்ளார். RIP
News March 19, 2026
பாகிஸ்தானை விட பின்தங்கிய இந்தியா.. எதில் தெரியுமா?

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 9-வது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. தனிநபர் GDP, ஆயுட்காலம், சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இதில் பாக்., 104-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், இந்தியா 116-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான்(147) உள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
News March 19, 2026
ஓரிரு நாளில் முடிவுக்கு வரும் திமுக கூட்டணி பஞ்சாயத்து

புதுச்சேரியில் திமுக-காங்., கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையில் நேற்று புதுச்சேரியிலுள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்.,- திமுகவினர் போட்டிபோட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், ஓரிரு நாள்களில் தொகுதிப்பங்கீடு உள்ளிட்டவை முடிந்துவிடும் எனவும் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.


