News May 13, 2024
தமிழ்நாடு அணியின் அடுத்த கோச் யார்?

தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது சுலக்ஷன் குல்கர்னி பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவர், விரைவில் ஓய்வு பெற இருப்பதால் அவருக்கு அடுத்த பதவியில் இருக்கும் பாலாஜி, தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 22, 2025
தவெக மாநாட்டில் சோகம்.. தொண்டர்கள் மரணம்

மதுரை தவெக மாநாட்டிற்கு சென்ற அக்கட்சியை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த பிரபாகரன்(33) மாநாட்டுக்கு செல்லும் வழியில் சக்கிமங்கலத்தில் உயிரிழந்தார். அதேபோல், மாநாடு முடிந்து நீலகிரி திரும்பி கொண்டிருந்த ரித்திக் ரோஷன்(18) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதே காரில் பயணம் செய்த ரவி(18) வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில், மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News August 22, 2025
பீடிக்காக ஒரு கேமியோவா? ஆமிர் கான் விளக்கம்

‘பீடியை பற்ற வைக்கவா பாலிவுட்டில் இருந்து வந்தீர்கள்?’ என்ற கேள்வியை ‘கூலி’ படம் பார்த்த பலரும் ஆமிர் கானிடம் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஆமிர் கான், கூலி படத்தில் ரஜினிக்கு பீடி பற்ற வைப்பதே தனது வேலை, இதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார். மேலும், தான் ரஜினியின் தீவிர ரசிகர் என்ற அவர், அவருடன் இணைந்து நடிப்பது பெருமை என்றும் விளக்கமளித்துள்ளார்.
News August 22, 2025
Specified Employee என்றால் யார்?

ஒரு நிறுவனத்தின் இயக்குநரே (Director) ‘Specified Employee’ என அழைக்கப்படுகிறார். இவர் கம்பெனியில் கணிசமான பங்குகளை வைத்திருக்க வேண்டும். தான் பணியாற்றும் நிறுவனத்தில் 20% வாக்குரிமையைக் கொண்டிருக்க வேண்டும். இவரது வருமானம் முன்னதாக ₹50,000-க்கு கீழ் இருக்கக்கூடாது என்ற வரைமுறை இருந்தது. இது தற்போது ₹2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவருக்கான <<17479799>>வருமான வரி<<>> சலுகைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.