News February 10, 2025
மணிப்பூரின் அடுத்த முதல்வர் யார்?

மணிப்பூர் CM பிரேன் சிங் திடீரென ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்ய பாஜக தீவிரம்காட்டி வருகிறது. அடுத்த முதல்வராக அக்கட்சியின் மூத்த தலைவர் யும்னம் கெம்சந்த் சிங் அல்லது சபாநாயகர் தோக்சோம் சத்யபிரதா சிங் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மணிப்பூரில் மைதேயி, குக்கி பழங்குடியின மக்கள் இடையே கடந்த 2 ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 4, 2026
ராசி பலன்கள் (04.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News March 4, 2026
ஈரான் பேச்சுவார்த்தைக்கு ரெடி… NO சொல்லும் டிரம்ப்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் 4-வது நாளாக தொடர்கிறது. ஈரானும் பதிலுக்கு வளைகுடா நாடுகளில் தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனிடையே ஈரானின் விமானப்படை, கடற்படை மற்றும் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இப்போது அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கான நேரம் கடந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
News March 4, 2026
சாதிய விஷம் விதைப்பவர்களை கைது செய்க: மாரி செல்வராஜ்

நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியுள்ள<<19286535>> கொலைவெறி தாக்குதல்<<>> பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய பெருமிதங்களை விஷமாக விதைத்து வரும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு சிறைபடுத்தவும், வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற TN-க்கான நம்பிக்கையை உருவாக்குமாறும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


