News January 19, 2025
அடுத்த பும்ரா யார்?

வேகப்பந்து வீச்சில் பும்ராவுடன் இணைந்து கலக்கி வந்த ஷமி, தொடர் காயத்தால் ஓய்வில் இருக்கிறார். இதனால், மாற்று வீரர்களை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி. சிராஜ் பழைய பந்தில் சிரமப்படுவதாக ரோஹித் நேற்று கூறினார். அதேநேரம், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ், நிதிஷ் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தேர்வாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இதில் யார் அடுத்த பும்ராவாக வருவார்? நீங்க சொல்லுங்க.
Similar News
News March 10, 2026
துடிக்க துடிக்க கொலை செய்த இளம் நடிகை.. PHOTO

விழுப்புரத்தில் குறும்பட இயக்குநர் ஜெயக்குமார் என்பவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருமணத்திற்கு வற்புறுத்தியதால் இளம் நடிகை பூஜா தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து, ஜெயக்குமாரை துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பூஜா மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
News March 10, 2026
349 பணியிடங்கள், ₹57,000 சம்பளம்.. Apply பண்ணுங்க

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <
News March 10, 2026
தொகுதிப் பங்கீடு .. EPS-ஐ சந்திக்கும் பியூஷ் கோயல்

தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று திருச்சி வருகிறார். திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வரும் பியூஷ் கோயல், இன்றிரவு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன்பின், நாளை தொகுதிப் பங்கீடு தொடர்பாக EPS-ஐ சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


