News January 24, 2025
மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

இயக்குநர் மணிரத்னத்தின் படங்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அவரது படங்கள் பெயரெடுக்கும். அவர் தற்போது, அவர் 34 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், அவர் அடுத்து புதுமுகங்களை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
Similar News
News December 9, 2025
ராஜீவ் காந்தி – சோனியா.. நீங்கா நினைவுகள் PHOTOS

ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின், சோனியா காந்தியின் வாழ்க்கை முழுவதுமாக மாறியது. இத்தாலியில் பிறந்த அவர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று, 2 முறை காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினார். இன்று அவரது 79-வது பிறந்த நாளில், ராஜீவ் காந்தியுடன் இருக்கும் சில மறக்க முடியாத போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 9, 2025
TOSS: இந்திய அணி பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
பிளேயிங் லெவனில் அபிஷேக், கில், சூர்யகுமார், திலக், ஹர்திக், துபே, ஜித்தேஷ், அக்ஷர், பும்ரா, அர்ஷ்தீப், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பின் டி20-ல் ஹர்திக் பாண்ட்யா இணைந்துள்ளதால் பேட்டிங் மற்றும் பவுலிங்கின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.
News December 9, 2025
தெரு நாய்க்கடி.. பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

தெரு நாய்க்கடி தொடர்பாக பள்ளிகளுக்கு அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டால் தயக்கமின்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்குமாறு மாணவர்களுக்கு உரிய ஆலோசனை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தெரு நாய்களுக்கு உணவு தருவது உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாய்க்கடியால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


