News April 30, 2024

இந்தியாவின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்?

image

டி20 உலகக் கோப்பைக்கான இந்தியா கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது. தோனி ஓய்வு பெற்றபின் நிரந்தர விக்கெட் கீப்பர் ஆவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, நடப்பு ஐபிஎல் தொடரில், KL ராகுல், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களில் யாரை அடுத்த கீப்பராக தேர்வு செய்யலாம்? உங்களது கருத்தை சொல்லுங்க.

Similar News

News January 28, 2026

அஜித் பவார் கடந்து வந்த பாதை!

image

மகாராஷ்டிரா அரசியலில் கிங் மேக்கராக இருந்த அஜித் பவார்<<18980498>>விமான விபத்தில்<<>> உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார், அரசு நிர்வாகத்தை கையாளுவதில் சிறந்து விளங்கினார். 1982-ல் அரசியலில் நுழைந்த அவர் 7 முறை MLA-வாக தேர்வாகியுள்ளார். NCP-ல் முக்கிய தலைவராக இருந்த அவர் அங்கிருந்து பிரிந்து பாஜக கூட்டணியில் இருந்து DCM-ஆக தேர்வானார்.

News January 28, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,960 உயர்வு

image

கடந்த சில நாள்களாக வரலாறு காணாத உச்சம் பெற்ற தங்கம் விலை நேற்று குறைந்தது. இந்நிலையில், மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹370 உயர்ந்து ₹15,330-க்கும், சவரன் ₹2,960 அதிகரித்து ₹1,22,640-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் வரும் நாள்களிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 28, 2026

CINEMA 360°: ரீ-ரிலீசாகும் STR படம்!

image

*STR பிறந்தநாளை முன்னிட்டு, ‘சிலம்பாட்டம்’ படம் பிப். 6-ம் தேதி ரீ-ரிலீசாகவுள்ளதாம் *துல்கர் சல்மான்- மிருணாள் தாக்கூர் மீண்டும் ஒரு காதல் படத்தில் நடிக்கவுள்ளதால், அது ‘சீதாராமம் 2’ படமாக இருக்குமோ என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது *‘Grandma’S Magic’ என்ற ஊறுகாய் கம்பெனியை சீரியல் நடிகை மகாலட்சுமி ரவீந்திரன் தொடங்கியுள்ளார் *பெரும் வெற்றிபெற்ற ‘அனிமல்’ படத்தின் பார்ட் 2, 2027-ல் தொடங்கவுள்ளதாம்.

error: Content is protected !!