News August 11, 2024
குல தெய்வம் தெரியாதவர்கள் யாரை வணங்க வேண்டும்?

நம் வாழ்வில் எல்லா தடங்கல்களையும் தாண்டி நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் கண்டிப்பாக குலதெய்வ வழிபாடு இருக்க வேண்டும். ஒருவேளை தங்களின் குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள், அண்ணாமலையார், சிவன், பெருமாள் ஆகிய தெய்வங்களில் ஒன்றை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வணங்கினால் வாழ்வில் இன்பம் செழிக்கும் என்கிறார்கள் முன்னோர்கள்.
Similar News
News December 12, 2025
எடையை குறைக்க தினமும் இத சாப்பிடுங்க போதும்!

உடல் எடையை குறைப்பதே, தற்போது பலருக்கும் ஒரு பிரச்னையாக உள்ளது. அதற்கு தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும் என்கின்றனர் நிபுணர்கள். *இதில் உள்ள வைட்டமின் சி மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது *நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துகிறது *கல்லீரல், கணையம் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது *வளர்சிதை மாற்றம் மற்றும் குடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது *செரிமானத்தை சீராக்குகிறது.
News December 12, 2025
கேள்விகளுக்கு பதில் எங்கே? சு.வெங்கடேசன்

மதுரை, கோவை மெட்ரோ குறித்த கேள்விக்கு, மத்திய அரசு சரியான பதிலை அளிக்கவில்லை என MP சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆக்ரா, போபால், இந்தூர், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை அணுகியதற்கும், மதுரை, கோவைக்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு, ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை’ என்பது போல, PM E-Seva குளிரூடப்பட்ட பேருந்து திட்டம் பற்றி பதில் கூறுவதாக விமர்சித்துள்ளார்.
News December 12, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை இன்று(டிச.12) புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ₹1,600 உயர்ந்து ₹98,000-க்கும், 1 கிராம் தங்கத்தின் விலை ₹200 அதிகரித்து ₹12,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரனுக்கு ₹160 மட்டுமே உயர்ந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,600 உயர்ந்துள்ளது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


