News January 1, 2025
ஆண்டின் முதல் சூரிய உதயத்தை யார் பார்த்தீங்க?

புது வருஷம் தொடங்கியாச்சு. இரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்க பலரும் பார்ட்டிகளில் ஈடுபட்டிருப்பீர்கள். பீச், ஹோட்டல் என பலவிதமாக புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொண்டாடித் தீர்த்திருப்பீர்கள். ஆனால், தொடங்கிய புத்தாண்டின் முதல் நாளை நமக்கு கொடுத்த முதல் சூரிய உதயத்தை யாரெல்லாம் கண்டு களித்தீர்கள் என கமெண்ட் பண்ணுங்க. இதுவும் ஒரு புது வரவேற்பு தானே.
Similar News
News November 23, 2025
திமுக, அதிமுக ரூட்டிலேயே செல்லும் விஜய்

திராவிட கட்சிகள் இலவசங்களை வழங்கி மக்களின் வாக்குகளை கவர்வதாக ஒரு பேச்சு எப்போதும் இருந்து வருகிறது. அக்கட்சிகளை கடுமையாக விமர்சிக்கும் விஜய்யும், தவெக ஆட்சிக்கு வந்தால் ஒரு நிரந்தர வீடு, பைக் என இன்று அறிவித்திருக்கிறார். இந்நிலையில், ‘சர்க்கார்’ படத்தில் இலவச கிரைண்டரை நெருப்பில் வீசிய அதே விஜய் தான், தற்போது இலவசங்களை கையிலெடுப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்கள் கருத்து?
News November 23, 2025
இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் தமிழன்

IND-க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தெ.ஆப்., வீரர் முத்துசாமி, சர்வதேச முதல் டெஸ்ட் சதத்தை விளாசி அசத்தியுள்ளார். தெ.ஆப்., தற்போது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்துள்ளது. IND சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தெ.ஆப்., 400 ரன்களை கடப்பதற்கு முக்கிய காரணம், தமிழ்நாட்டின் நாகையை பூர்வீகமாக கொண்ட முத்துசாமியின் நிதானமான ஆட்டம்தான்.
News November 23, 2025
தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பது கண்டுபிடிப்பு

பிஹாரில் 6 மாவட்டங்களில் உள்ள 40 தாய்மார்களின் தாய்ப்பால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், அதில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்ததன் காரணமாக தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தாய்ப்பாலை குழந்தைகள் பருகினால் அவர்களுக்கு புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள் ஏற்படும் என AIIMS டாக்டர் அசோக் சர்மா எச்சரித்துள்ளார்.


