News June 5, 2024
மத்தியில் ஆட்சியமைப்பது யார்? பரபரப்பில் தலைநகரம்

மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, ஆட்சியமைக்க முயல்கிறது. அக்கட்சிக்கு ஆதரவு தர, சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் டெல்லி விரைந்துள்ளனர். புதிய அரசு குறித்து, NDA தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மறுபக்கம், INDIA கூட்டணியினரும் மாலை 6 மணிக்கு கூட்டம் நடத்துவதால், அனைவரின் பார்வையும் டெல்லியை நோக்கியுள்ளது.
Similar News
News April 1, 2026
மேடையில் கண் கலங்கினார் ஆதவ் அர்ஜூனா

சாதியின் காரணமாக தனது அம்மா தற்கொலை செய்துகொண்டதாக ஆதவ் அர்ஜூனா வேதனை தெரிவித்தார். கட்டாயத்தின் பேரில் சாதிய கட்டமைப்புக்குள் திருமணம் செய்து அவர் வாழ்ந்ததாகவும், அதன்பிறகு கடன் சுமை தாங்க முடியாமல் தன் கண் முன்னே உயிரைவிட்டதாகவும் ஆதவ் பிரசார மேடையில் கண் கலங்கினார். பிற்காலத்தில் அம்பேத்கர், பெரியாரை படித்து ஏன் சாதியை ஒழிக்கவேண்டும் என புரிந்துகொண்டு அரசியல் பாதையை தேர்வு செய்ததாக கூறினார்.
News April 1, 2026
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர விழாவையொட்டி இன்று தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கெல்லாம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். அதேநேரம், முழு ஆண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.
News April 1, 2026
வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை: நயினார்

தனிப்பட்ட காரணங்களுக்காக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அண்ணாமலை விரும்பவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயரும் உள்ளதாகவும், தற்போது அதுபற்றி விவரிக்க முடியாது எனவும் நயினார் கூறினார். மேலும், தகுந்த வேட்பாளர்களை பாஜக தலைமை தேர்வு செய்து, ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>


