News March 29, 2025
நிர்வாண PHOTOS வெளியிட்டது யார்? மெலானியா ஓபன் டாக்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா, ஒரு முன்னாள் மாடலாவார். இந்நிலையில், அவர் மாடலிங் செய்தபோது வெளியான நிர்வாணப் படங்கள், 2016 அதிபர் தேர்தலின் போது, பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை செய்தது யார் என்பது அப்போது மர்மமாகவே இருந்தது. இந்நிலையில், தன்னை அவமானப்படுத்தவே, டிரம்ப்பின் அப்போதைய அரசியல் ஆலோசகரான ரோஜர் ஸ்டோன், அதை வெளியிட்டதாக, மெலானி தற்போது தெரிவித்துள்ளார்.
Similar News
News April 1, 2025
மும்மொழிக் கொள்கைக்கு 35 லட்சம் பேர் ஆதரவு

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு 35 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் கடந்த மாதம் தொடங்கியது. ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதற்காக பாஜகவினர் வீடு வீடாக சென்று மக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
News April 1, 2025
நவீன தமிழ் சினிமாவின் அடையாளங்கள்

இயக்குநர் பாலசந்தரின் படங்களில்தான் முதன்முதலில் வலிமையான பெண் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டன. கிராமத்து மண்வாசனை, உறவுமுறைகளை திரையில் காட்டி பாரதிராஜா புரட்சி செய்தார். பாலுமகேந்திராவின் படங்கள் எளிமையும், நுண்ணுணர்வும் மிக்கதாய் இருக்கும். தமிழ் சினிமாவில் டெக்னாலஜிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் மணிரத்னம். இவரது படங்களில் காட்சியமைப்பு தனித்துவம் மிக்கதாய் இருக்கும்.
News April 1, 2025
டாஸ்மாக்- ED விவகாரம்.. இன்று விசாரணை

டாஸ்மாக் நிறுவனத்தில் ED ரெய்டு நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள், சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. டாஸ்மாக் தலைமையகத்தில் ரெய்டு நடத்தி, ₹1,000 கோடி வரை முறைகேடு நடந்ததாக ED அறிக்கை வெளியிட்டது. இதை சட்டவிரோதம் என அறிவிக்கவும், தமிழக அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில், அனுமதியின்றி ரெய்டு நடத்த கூடாது என உத்தரவிடக் கோரியும் அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.