News October 25, 2024

செபி தலைவரை யார் பாதுகாக்கிறார்கள்? ராகுல்

image

செபி தலைவரை பாதுகாக்கும் திட்ட பின்னணியில் யார் உள்ளார்கள் என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். பொது கணக்கு குழு முன்பு ஆஜராகாமல் செபி தலைவர் மாதாபி புரி பூச் தவிர்த்தார். இதனால் அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பொது கணக்கு குழு முன்பு ஆஜராகி பதிலளிக்க ஏன் மாதாபி தயங்குகிறார் என்று வினவியுள்ளார்.

Similar News

News January 17, 2026

நடப்பது Vs படிக்கட்டில் ஏறுவது: FAT-ஐ குறைக்க எது பெஸ்ட்?

image

கொழுப்பை குறைக்க, கலோரிகளை எரிக்க நடப்பதும், படிக்கட்டுகளில் ஏறுவதும் சிறந்த தேர்வு. *நடப்பது: எந்த வயதினரும் பாதுகாப்பாக செய்யக்கூடியது, வேகமாக நடந்தால் அதிக கலோரிகளை எரிக்கலாம், மன அழுத்தத்தை குறைக்கும். *படிக்கட்டுகளில் ஏறுவது: நடப்பதை விட கடினம். ஆனால், இடுப்பு, கால் தசைகள், உடலின் மைய தசைகளுக்கு அழுத்தம் கொடுத்து வேகமாக அதிக கலோரிகளை எரிக்க உதவும். வயது, உடல் வலிமைக்கேற்ப தேர்வு செய்யுங்கள்!

News January 17, 2026

‘அதிமுக கூட்டணியில் புதிதாக 4 கட்சிகள்’

image

PM மோடி தலைமையில் வரும் 23-ம் தேதி மதுராந்தகத்தில் நடக்கும் கூட்டத்தில், NDA-ல் இடம்பெறும் கட்சிகள் பற்றி அறிவிக்கப்படும் என பாமக Ex MLA மு.கார்த்தி கூறியிருக்கிறார். தங்களது கூட்டணியில் மேலும் 4 கட்சிகள் வர உள்ளதாக கூறிய அவர், அவை எந்த கட்சிகள் என்று இப்போது சொல்ல முடியாது என்றார். மேலும், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே தங்கள் கூட்டணியின் பொதுவான நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 17, 2026

மீண்டும் இணையும் ‘சூதுகவ்வும்’ காம்போ!

image

‘சூதுகவ்வும்’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய ‘காதலும் கடந்து போகும்’ வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், ‘கை நீளம்’ என்ற புதிய படத்தில் இருவரும் இணைய உள்ளதாக நலன் குமாரசாமி தெரிவித்துள்ளார். ‘சூதுகவ்வும் 2-ம் பாகமாக உருவாக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த கதையில், சரியான கிளைமாக்ஸ் அமையாததால் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!