News March 24, 2025

திருப்பரங்குன்றம் யாருக்கு சொந்தம்? ஐகோர்ட் அதிரடி

image

திருப்பரங்குன்றம் மலை கந்தர் மலையா? சிக்கந்தர் மலையா? என சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அது அனைவருக்கும் சொந்தம் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. கடவுள்கள் எல்லாம் சரியாகத் தான் இருக்கிறார்கள்; சில மனிதர்கள் தான் சரியாக இல்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அப்போது, அந்த மலை தங்களுக்கே சொந்தம் என தொல்லியல் துறை வாதிட்டது. இதையடுத்து வழக்கு ஏப்.7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Similar News

News March 27, 2025

2000 அமெரிக்க விசா Appointments ரத்து!

image

விதிகளை மீறி விண்ணப்பிக்கப்பட்டிருந்த 2000 விசாக்களுக்கான Appointments-களை அமெரிக்க தூதரகம் ரத்து செய்துள்ளது. இதுபோன்ற மோசடிகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தெரிவித்த அமெரிக்க தூதரகம் இனிமேல் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், தவறான வழிகளில் விசாவுக்கான Appointments பெறுபவர்களின் கணக்குகள் முடக்கப்படுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

News March 27, 2025

நீங்க Jio, Airtel, Vi சிம் பயன்படுத்துறீங்களா?

image

தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களது பயனர்களுக்கு ‘Caller Name Presentation’ வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளன. இது, போனில் உங்களுக்கு அழைப்பு விடுக்கும் நபரின் பெயரைக் காண்பிக்கும். ஆன்லைன் மோசடிகள், போலி அழைப்புகளைத் தடுக்க TRAI முன்பு இதை முன்மொழிந்தது. இந்நிலையில், தற்போது Jio, Airtel, Vi நிறுவனங்கள் இந்த வசதியை செயல்படுத்த தயாராக உள்ளன. KYC ஆவணத்தின் அடிப்படையில் இப்பெயர்கள் காட்டப்படும்.

News March 27, 2025

வக்பு மசோதா மத உரிமையை பாதிக்கிறது: CM ஸ்டாலின்!

image

சட்டப்பேரவையில் வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை முன்மொழிந்து உரையாற்றிய ஸ்டாலின், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா, மாநில சுயாட்சியை பாதிக்கும் என்றார். மத உரிமையை பாதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் சொன்ன திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே, வக்பு வாரிய மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

error: Content is protected !!