News May 10, 2024
‘G.O.A.T’ தொலைக்காட்சி உரிமம் யாருக்கு?

விஜய் நடித்து வரும் ‘G.O.A.T’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ (Zee) நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது ரஷ்யாவில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படம், செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
Similar News
News March 27, 2026
BREAKING: டாஸ்மாக் 4 நாள்கள் விடுமுறை

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி,TN முழுவதும் 4 நாள்கள் டாஸ்மாக் இயங்காது என்று ECI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 21,22 மற்றும் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதியும், டாஸ்மாக், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும்; இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
News March 27, 2026
Anna University-ல் மீண்டும் ஒரு பூகம்பம்..

அண்ணா பல்கலையில் பேராசிரியர் ஒருவர் 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவி ஒருவர் சென்னை கமிஷ்னரிடம் புகாரளித்துள்ளார். இரவு 10 மணிக்கு மேல் செல்போனில் ஆபாசமான மெசேஜ்களை பேராசிரியர் அனுப்புவதாகவும், இதை வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவேன் என அவர் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பல மாணவிகளை பேராசிரியர் ஞானவேல் பாபு இப்படி செய்ததாக புகார் எழுந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
News March 27, 2026
ஐஜேகே வேட்பாளர்களை அறிவித்தார் பாரிவேந்தர்

அதிமுக கூட்டணியில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு பல்லாவரம், குன்னம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட பல்லாவரம் தொகுதியில் வெங்கடேசன், குன்னம் தொகுதியில் சரண்யா அன்பழகன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், தான் போட்டியிடவில்லை என்று பாரிவேந்தர் கூறியுள்ளார்.


