News April 11, 2024
விஜய் அரசியலுக்கு வர யார் காரணம் ? (1)

ஹிட் படங்களை கொடுத்து உச்சத்தில் இருந்த விஜய், திடீரென தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். திரைத்துறையில் அவரின் தந்தை சந்திரசேகர் இருந்ததால், எளிதில் விஜய்யால் அறிமுகமாக முடிந்தது. ஆனால் அரசியலில் எந்த பின்னணியும் இல்லாமல் சாதிப்பது அரிதாகும். விஜய்யின் தந்தை சந்திரசேகர், திமுகவில் இருந்த காரணத்தால் அவரின் தாக்கம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
Similar News
News January 18, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி.17) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News January 18, 2026
மகன் திருமணத்திற்கு பின் எனக்கு திருமணம்: பார்த்திபன்

தனது மகனுக்கு ஒரு திருமணம் முடிந்துவிட்டால், அதன்பின் தனக்கென ஒரு துணையைத் தேடிக்கொள்ள நினைப்பதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். புதிய பாதை படத்தின் மூலம் இயக்குநர் & நாயகனாக அறிமுகமான பார்த்திபன், 1990-ல் நடிகை சீதாவை மணந்த நிலையில், கடந்த 2001-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்நிலையில், தனக்கான துணை ஒரு புரிதலான தோழியாகவோ அல்லது ஒரு சிறந்த கம்பெனியனாகவோ இருக்கலாம் என்று விவரித்துள்ளார்.
News January 18, 2026
ராசி பலன்கள் (18.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


