News March 26, 2025
அதிமுக கூட்டணியில் யார் யார்?

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக பார்முலாவை பின்பற்ற அதிமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக 170+, NDA 64 இடங்களில் போட்டியிட அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. இதில், BJP, DMDK, PMKவுக்கு இரட்டை இலக்கத்திலும், தமாகா, புதிய தமிழகம், புரட்சி பாரதம், தமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்திலும் சீட் கொடுக்கப்படலாம். சூழலை பொறுத்து, TTV கூட்டணியில் இணையக்கூடும்.
Similar News
News November 4, 2025
FLASH: தங்கம் விலை மளமளவென குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $54 குறைந்து $3,948-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் இன்று சவரனுக்கு ₹800 குறைந்த நிலையில், நாளையும் கணிசமாக விலை குறையலாம். SHARE IT
News November 4, 2025
உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க… PHOTOS

தற்காலத்தில் சிறுவர்கள் எப்போதும் போனுடனே இருக்கின்றனர். இதனால் அவர்களின் கவனக்குவிப்பு திறனும் நினைவாற்றலும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், உங்கள் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் உணவுகளை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு தெரிந்த ஐடியாவையும் கமெண்ட் பண்ணுங்க!
News November 4, 2025
தமிழகத்தை கலவர பூமியாக்கும் அன்புமணி: ராமதாஸ்

பாமக MLA <<18196872>>அருள்<<>> மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராமதாஸ், நடைபயணம் என்ற பெயரில் தன்னுடன் உள்ள பாமகவினரை ஒழிக்க அன்புமணி திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியுள்ள அவர், அன்புமணியின் நடைபயணத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறியுள்ளார். அன்புமணியின் கும்பலை தடை செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


