News October 28, 2024
யாருக்கு கொக்கிப் போடுகிறார் விஜய்?

கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் கூறியுள்ளார். இது கூட்டணி ஆட்சி என முழக்கும் விசிகவுக்கான க்ரீன் சிக்னலாகப் பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள், ஆட்சி அதிகாரத்தை இழந்து அடுத்த தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் கட்சிகளுக்கான கொக்கியாகவும் கருதலாம். இதில் சிறு கட்சிகள் அவருடன் இணைந்து பயணிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News January 13, 2026
ஜன.20-ல் திமுக மா.செ., கூட்டம்

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், ஜன.20-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொ.செ., துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில், தேர்தல் களம் எப்படி உள்ளது, பூத் வாரியான கருத்தரங்கங்கள் குறித்த நிலவரம், தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 13, 2026
பாஜக தேசிய தலைவராகும் நிதின் நபின்

BJP-ன் அடுத்த தேசிய தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜன.19-ல் அவர் மனு தாக்கல் செய்வார் என்றும், போட்டியில்லாத நிலையில் ஜன.20-ல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் நடக்கும் இந்நிகழ்விற்கு பாஜக CM-கள், மாநில தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நபின் தற்போது BJP-ன் தேசிய செயல்தலைவராக உள்ளார்.
News January 13, 2026
‘நான் சாகப் போறேன்.. என் சாவுக்கு காரணம் இதுதான்’

பாகுபாடு ஒழிப்பை கற்றுத்தர வேண்டிய கல்லூரியிலேயே, நிறவெறி சர்ச்சையால் மாணவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பல் மருத்துவம் பயின்று வந்த யஷஸ்வினியிடம், கருப்பாக உள்ள ஒருவர் எப்படி டாக்டராக முடியும் என ஆசிரியர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த அவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கல்லூரி முதல்வர் உள்பட 5 பேர் மீது FIR பதிந்து போலீஸ் விசாரிக்கிறது.


