News April 7, 2025

நொந்து போனது யார்? – CM ஸ்டாலினுக்கு EPS பதிலடி

image

ஸ்டாலின் அரசில்தான் மக்கள் நொந்து நூலாகியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். அடுத்தாண்டு தேர்தல் வருவதை கருத்தில் கொண்டுதான் சட்டப்பேரவையில் மீனவர்களுக்கான அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தது திமுக அரசுதான் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக தொண்டர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளதாக பேரவையில் CM ஸ்டாலின் பேசி இருந்தார்.

Similar News

News April 12, 2025

Health Tips: ஆளி விதையின் நன்மைகள்..!

image

ஆளி விதையின் அளவு சிறியது. ஆனால், அதன் பயன் பெரியது. இதனை பொடி செய்து மோரில் கலந்து பருகலாம். இதில், பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. இதிலுள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் கேன்சர் தாக்கத்தை எதிர்த்து போராடும். ஆளி விதையின் கரையாத நார்ச்சத்து உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. SHARE IT.

News April 12, 2025

தொப்பி போட்டால் முடி கொட்டுமா..?

image

சம்மர் சீசனில் பலரும் வெளியே வரும் போது தொப்பி அணிவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால், தொப்பி அணிவதால், முடி கொட்டும் ஆபத்து இருக்கிறது என பயப்படுவார்கள். ஆனால் அது முழுக்க உண்மை இல்லை. அதீத வியர்வை தலையில் வரும் போது, உருவாகும் உப்பு தலையில் நமைச்சலை கொடுப்பதுடன் முடி கொட்டுவதற்கான காரணியாகவும் அமைகிறது. மிக இறுக்கமான தொப்பியை அணியாமல் இருப்பதுதான் கரெக்ட்!

News April 12, 2025

கிராமப்புற இளைஞர்களுக்காக SBI புதிய அறிவிப்பு

image

கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் வகையில் ‘SBI Youth for India’ என்ற புதிய திட்டத்தை SBI அறிவித்துள்ளது. ₹19,000 மாதாந்திர உதவித்தொகையுடன் கூடிய இந்த திட்டத்திற்கு 21 – 31 வயதுடைய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 13 மாதங்கள் பயிற்சிக்காக <>youthforindia.org<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிப்போர் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். உடனே அப்ளை பண்ணுங்க.

error: Content is protected !!